Skip to main content

பெண் குழந்தைகள் தினம்: 40 குழந்தைகளுக்குத் துவங்கப்பட்ட செல்வமகள் சேமிப்புத் திட்டம்

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

Girl Child Day: Wealth Savings Plan launched for 40 children

 

இந்தியா முழுவதும் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மிளகுபாறை அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தலைமுறை பெண் குழந்தைகளுக்கு இந்திய தலைமை தபால் நிலையம் மூலம் மத்திய அரசு அறிவித்திருந்த செல்வமகள் சேமிப்புத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் 40 பெண் குழந்தைகளுக்கு முதல் வருட தவணையாக ரூபாய் 250 திருச்சி தலைமை தபால் நிலையம் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது. இன்று அதற்கான நிகழ்ச்சி மிளகுபாறை அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.

 

அதில், மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், பொன்மலை காவல் ஆய்வாளர் நசீம், முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், துணைக் கண்காணிப்பாளர் குருசங்கர், அப்துல் லதீப், அஞ்சல் துறை அதிகாரிகள், துணை அஞ்சலக அதிகாரி செந்தில்குமார், வணிக அதிகாரி ஐசக் சேவியர், வட்டாரக் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் காஞ்சனா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மற்ற அலுவலர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Central government allowed Santhan to go to Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 2022 நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் தங்களை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்தனர். இத்தகைய சூழலில் சாந்தன் தன்னை இலங்கைக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு இந்தியா, இலங்கை மற்றும் தமிழக அரசுகளுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதே சமயம், “கடந்த 32 ஆண்டுகளாக தனது தாயை பார்க்கவில்லை. அவரது முதுமைக் காலத்தில் கூட இருந்து வாழ விரும்புகிறேன். தாயை கவனித்துக்கொள்ள தன்னை இலங்கைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் கடந்த 13 ஆம் தேதி (13.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, “சாந்தன் தாயகம் திரும்ப ஒரு வாரத்தில் அனுமதிக்கான ஆணை வழங்கப்படும்” என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழக அரசு சார்பில், “சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை தூதரகம் வழங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவின் நகல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாந்தன் வரும் 26 அல்லது 27 ஆம் தேதி இலங்கை புறப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

தமிழகத்தில் தொடரும் போராட்டம்; ‘அமரன்’ படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Tamil Nadu staged a road blockade to ban the movie Amaran

கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பலரின் கவனத்தை பெற்றது. அதே சமயம், படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்துள்ளதாக கூறி எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. 

இந்த நிலையில், தேசிய ஒற்றுமைக்காக போராடுகின்ற இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கூறி அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக முழுவதும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே சாலை மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் கலீல் ரகுமான், மாவட்ட துணைச் செயலாளர் முகமது தாஹா, அபூபக்கர் சித்திக், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஷேக்கான், பேரவை மாவட்ட செயலாளர் பீர், மலைக்கோட்டை பகுதி செயலாளர் இப்ராஹிம் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.