Skip to main content

பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்து; ஊழியருக்கு நேர்ந்த சோகம்

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Gasoline tank roof collapse accident Tragedy the employee

 

சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று (29.09.2023)மாலை சென்னையில் பெய்த மழையின் போது வீசிய காற்றால் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது மழைக்காக பெட்ரோல் பங்கில் ஒதுங்கிய வாகன ஓட்டிகள் பலர் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கூரையின் அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதுமட்டுமின்றி இந்த விபத்தில் சிக்கி ஏராளமான இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

 

இந்நிலையில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்த ஊழியர் கந்தசாமி (வயது 56) என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்த தகவலறிந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோக்குமார், மேலாளர் வினோத் மீது 304 ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

கணநேரத்தில் 40 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள்; வேளச்சேரியில் சோகம்

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 

 The workers were momentarily trapped in a 40-foot ditch; Tragedy in Velachery

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் ஐந்து பரலாங் சாலையில் 40 அடி பள்ளத்தில் ஐந்து தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் ஏற்பட்ட பள்ளத்தில் தொழிலாளர்கள் உள்ளே விழுந்தனர். தற்போது வரை மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திடீர் பள்ளத்தில் சுற்றியுள்ள மழை நீர் இறங்கி வருகிறது. கணநேரத்தில் நிகழ்ந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கொட்டும் மழையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Study of Minister Udayanidhi Stalin in rain

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

அதே சமயம் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை வி.பி. ராமன் சாலையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்