Skip to main content

நள்ளிரவில் வாயுக்கசிவு... மயங்கி விழுந்த ஊழியர்கள்

 

nn

 

சென்னை கொடுங்கையூரில் ரசாயன தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட வாயுக்கசிவால் நான்கு பேர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

சென்னை கொடுங்கையூர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் காலணிகளை ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ரசாயனம் ஒன்றை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். நேற்று இரவு அந்த தொழிற்சாலையில் ரசாயனம் இருந்த ட்ரம்மில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் அதிலிருந்து திரவமானது வாயுடன் கலந்து வெளியேறியது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த வாயுக் கசிவால் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் மயங்கி விழுந்தனர். அப்பொழுது சம்பவ இடத்திற்கு சென்ற சுரேஷ் என்பவரும் மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மயங்கி விழுந்த நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். நள்ளிரவில் வாயுக்கசிவால் நான்கு பேர் மயங்கி விழுந்த சம்பவம் கொடுங்கையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.