gang was arrested for smuggling cannabis from Odisha to Vellore

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திரா எல்லைப்பகுதியான உள்ளிப்புதூர் அருகே வேலூர் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான போலீசார் வாகன சோனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இரண்டு இருச்சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த 4 இளைஞர்களை மடக்கி சோதனை செய்த போது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்து.

Advertisment

அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருச்சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து அவர்களிடம் தொடந்து விசாரணை செய்தனர். அதில்,நான்கு இளைஞர்களும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்காவைச் சேர்ந்த விஜய்(23) ரிஷிகுமார்(20), நெடுஞ்செழியன்(23) விக்னேஷ்(25) ஆகியோர் என்பதும், அவர்கள் 10 கிலோ கஞ்சாவை ஒடிசா மாநிலம் அனாங்காப்பள்ளி பகுதியில் இருந்து இரயில் மூலம் ஆந்திரா மாநிலம் சித்தூர் வரை கடத்திவந்து, அங்கிருந்து இரண்டு இருச்சக்கர வாகனத்தில் வேலூருக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

Advertisment

இளைஞர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.