Skip to main content

‘செவ்விளநீர் மரங்களை வளர்க்கவும்’ ; நில உரிமையாளருக்கு நூதன முறையில் எச்சரிக்கை விடுத்த திருட்டு கும்பல்!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
A gang of thieves warned the landlord in a strange way

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது S.குளத்தூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன் மகன் குமரவேல். இவருக்கு அதே கிராமத்தில் ஐந்து ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இவருடைய விவசாய நிலத்தில் தென்னைமரம், பலாமரம், வாழை மரம், கொய்யா மரம் ஆகிய மரங்களும் உள்ளன.

இந்நிலையில், குமரவேல் தன்னுடைய உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றுள்ளார். இதனை சாதுரியமாக நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், குமரவேல் ஊரில் இல்லாத சமயம் பார்த்து இவரது விவசாய நிலத்திற்கு சென்று இரவோடு இரவாக தென்னை மரத்தில் ஏறி இளநீரை பறித்து சத்தம் கேட்காதவாறு அதனை கயிறு மூலம் கீழே இறக்கி வெட்டி மகிழ்ச்சியுடன் குடித்துள்ளனர்.

இதனையடுத்து, நில உரிமையாளர் குமரவேல் இன்று (12-06-24) அதிகாலை தன்னுடைய விவசாய நிலத்தை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அப்போது தென்னை மரத்தில் இருந்த இளநீர் திருடுபோய் உள்ளது தெரியவந்தது.  இதையடுத்து, புளிய மரத்தின் அருகில் கால்நடை கட்ட சென்ற குமரவேல் புளிய மரத்தைப் பார்த்து அதிர்ந்து போனார். அங்கு, நீல நிறத்தில் சார்ட் அட்டையில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை பார்த்து பெருமூச்சுட்டுள்ளார் அந்தச் சாட் அட்டையில், ‘இது எங்களுடைய 128 - வது இளநீர் வேட்டை. முக்கிய குறிப்பு; தீர விசாரிக்காதீர்கள் இதுவே இறுதியாகட்டும் மீறி விசாரித்தால் மீண்டும் வேட்டை தொடரும் நன்றி!!! 

A gang of thieves warned the landlord in a strange way

இப்படிக்கு “ஓம் சக்தி ஆதிபராசக்தி, ஸோசோத்திரம் ஆண்டவரே, லு.கா82 வது அதிகாரம் , எல்லாப் புகயும் இறைவனுக்கே அல்லா”. மேலும் வேண்டுகோள்; செவ்விளநீர் மரங்களை வளர்க்கவும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அதில், ‘எச்சரிக்கை:-எங்களை கண்டுபிடிக்க இயலாது’ எனக் குறிப்பிட்டு பெரிய நாமத்தைப் போட்டுவிட்டு நகரம் படம் வடிவேல் பாணியில் நூதன  முறையில் திருடி இளநீரை வேட்டையாடி குடித்துவிட்டு அங்கிருந்து மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்றுள்ளனர். யார் இந்த வேலையை பார்த்திருப்பார்கள் என தெரியாமல் கிராமமே திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சூறைக்காற்று வீசியதில் துண்டிக்கப்பட்ட மின் கம்பம்; மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
people are suffering without electricity

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே அரண்மனை புதூர் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த வாரம் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்து வந்த நிலையில் அரண்மனை புதூர் கிராமத்தில் மின்சாரம் வழங்கி வரும் மின்கம்பங்கள் பாதியிலேயே முறிந்து விழுந்து விட்டதால் ஒரு வாரத்திற்கு மேலாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். எனவே மின் கம்பத்தை சரி செய்து உடனடியாக மின்சாரம் வழங்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Next Story

மின்சார வசதியின்றி தவிக்கும் சலவைத் தொழிலாளர்கள்; எண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவர்கள்!

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Laundromats without access to electricity

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட வீரட்டகரம் கிராமத்தில், கடலூர் செல்லும் சாலையோரம், ஐந்துக்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர் குடும்பத்தினர் குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பல தலைமுறைகளாக இங்கே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்களது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கப்படாததால், இவர்கள் இரவு நேரங்களில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் வெளிச்சத்திற்காக, அகல் விளக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து விஜயகுமாரி கூறியதாவது:  “சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு தற்காலிகமான முறையில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளை ஆக்கிரமித்து வெட்டப்பட்டுள்ள கிணறுகளுக்கும் மின் மோட்டார் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சாலையோரம் அரசுக்குச் சொந்தமான இடத்தில், பல தலைமுறைகளாக வீடுகட்டி வசித்து வரக்கூடிய எங்களுக்கு, மின்வாரிய அதிகாரிகள் தற்காலிகமான முறையில் மின் இணைப்பு வழங்க மறுக்கிறார்கள்” என்று தெரிவித்தார். மேலும், தேர்தல் நேரத்தில் ஓட்டு வாங்க  அரசியல்வாதிகள் வருகிறார்கள். அப்போது, எங்கள் வீடுகளுக்கு தற்காலிகமான முறையில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறுகிறார்கள். தேர்தல் முடிந்ததும் அவர்கள் எங்களை மறந்து விடுகிறார்கள். மின்வாரிய அதிகாரிகளை போலவே, அரசியல்வாதிகளும் எங்களை வஞ்சிப்பது, வேதனையாக உள்ளது.

சிவகாமி என்பவர் கூறியபோது, “மின்சார வசதி இல்லாததால், பள்ளியில் படிக்கும் எங்கள் குழந்தைகள் இரவு நேரங்களில் மண்ணெண்ணெய்  விளக்கை பயன்படுத்தி, படிக்கிறார்கள். அப்படி படிக்கும்போது,  அவர்களுக்கு புத்தகத்தில் இருக்கக்கூடிய எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை என்று ஏற்கனவே எங்கள் குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை. நாங்களும் படிக்கவில்லை. எங்களது குழந்தைகளாவது படிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை என்றார்.

எனவே, மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டு,  பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை, சலுகைகளை அறிவித்து, செயல்பட்டு வருகின்ற தமிழக முதல்வர், சலவைத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் மீது கருணை கொண்டு, எங்கள் வீடுகளுக்கு தற்காலிகமான முறையில் மின் இணைப்பு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.