Skip to main content

போலி சான்றிதழ்; நடராஜர் கோவில் தீட்சிதர் உள்ளிட்ட மாஃபியா கும்பல் கைது!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Gang including Nataraja temple Dikshitar arrested for fake certificates in Chidambaram

சிதம்பரம் அருகே கோவிலம் பூண்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை(18.6.2024) இரவு அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் ஒரே இடத்தில் மொத்தாக கிடந்துள்ளது.  இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.  அதன் பேரில் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையிலான காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கிடந்த சான்றிதழ்களைக் கைப்பற்றி விசாரணை செய்த போது போலி சான்றிதழ்கள் எனத் தெரியவந்தது. இதில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சங்கர் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் இவருடன் நாகப்பன் மற்றும் வேறு ஒருவரும் தொடர்பில் இருந்துள்ளார் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

பின்னர் இது குறித்து சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி தீவிர விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தமிழக மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் உள்ள அனைத்து விதமான பல்கலைக்கழகங்களுக்கும் இவர்கள் 5000க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களை அச்சடித்து விற்பனை செய்துள்ளதும் மேலும் 1000-த்திற்கும் மேற்பட்ட சான்றிதழ்களை அச்சடித்து வழங்குவதற்காக வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. 
 

Gang including Nataraja temple Dikshitar arrested for fake certificates in Chidambaram
சங்கர் - நாகப்பன்

இவர்கள் போலி சான்றிதழ் அச்சடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் மற்றும் போலி சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் இவர்கள் வழங்கிய போலி சான்றிதழ்களை வைத்து பல்லாயிரம் கணக்கானோர் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்களா? மேலும் இந்தப் போலி சான்றிதழ் அச்சடித்து விநியோகம் செய்வதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவிலும் இதன் நெட்வொர்க் உள்ளதா? இதில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் பெரும் புள்ளிகள் சிக்குவார்களா எனக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

சார்ந்த செய்திகள்