Skip to main content

நீதிமன்றத்தில் ஆஜராகி திரும்பிய குற்றவாளிகளின் மீது கொலைவெறி தாக்குதல்

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

gang beating two people who came out after appearing in court

 

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் ஆஜராக வந்த இளைஞர்கள். ஆஜராகி வீடு திரும்புகையில் சரமாரியாக 6 மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர். 

 

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா வழக்கிற்காக ஆஜராக, கோவை கணபதி வஉசி நகரைச் சேர்ந்த 22 வயதான நிதீஷ் குமார் வந்திருந்தார். நிதீஷ் மேல் இரத்தினபுரி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்குகள் விற்பனை முதலான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருடன், காந்திபுரத்தைச் சேர்ந்த நண்பர் ரஞ்சித்குமாரும்(22) நேற்று நீதிமன்றம் வந்தார். ரஞ்சித் குமார் மீதும் பெண் வன்கொடுமை , கஞ்சா விற்பனை வழக்கு போன்ற வழக்குகள் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் உள்ளது. இவர்களுடன் கார்த்திக் என்பவரும் சேர்ந்து நீதிமன்றம் சென்றுள்ளார். இவர்கள், நிதீஷ்குமார் வழக்கு நடந்து வரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு வழக்குகள் நீதிமன்றத்திற்கு நேற்று உடன் வந்துள்ளனர்.

 

தொடர்ந்து, ரஞ்சித் குமாரின் வழக்கும் அங்குள்ள மகளிர் நீதிமன்றத்தில் தான் வாதிடப்பட்டு வருகிறது. எனவே, ரஞ்சித்தும், நிதீஷ் குமாரும் தங்களின் வழக்குகளுக்கு ஆஜராகி விட்டு தனது நண்பர் கார்த்தியுடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் காந்திபுரம் பயணித்தனர். மூவரும் நஞ்சப்பா சாலை அருகே சென்ற பொழுது, எதிர்பாராத விதமாக 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இரண்டு வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.

 

இதனையறிந்த மூவரும் வண்டியில் வேகமாகச் சென்ற போது நிலை தடுமாறி கீழே சரிந்தனர். அப்போது, மூவரையும் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைக்க கார்த்தி மட்டும் அங்கிருந்து தப்பியோட, ரஞ்சித்தும், நிதீஷ் ஆகிய இருவரும் சிக்கிக்கொண்டனர். பின்பு இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வரவே அந்த கும்பல் தப்பியோடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் முன் விரோதத்தின் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறதா என்ற கோண்டத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் நீதிமன்றத்தில் வழக்கிற்காக ஆஜராகி விட்டு வெளியே வந்தபோது முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராய விவகாரம்; உயிரிழப்பு 16 ஆக உயர்வு

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
nn

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 16 ஆக உயர்ந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட 60 க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே  முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். 

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்னர். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு அமலாக்க பிரிவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த கவிதா, பாண்டி, செல்வி,பாரதி, ஆனந்தன், சிவச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், மனோஜ் உள்ளிட்டோரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் விவரம்: சுரேஷ், பிரவீன், மற்றொரு சுரேஷ், தனக்கொடி, வடிவு, சேகர், கந்தன், ஆறுமுகம், ஜெகதீஷ், மணிகண்டன், மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா, நாராயணசாமி, ராமு, சுப்பிரமணி, டேவிட்.

Next Story

13 பேர் உயிரிழப்பு; 9 பேர் கூண்டோடு சஸ்பெண்ட்; சிபிசிஐடிக்கு மாற்றம்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
13 people lost their lives; 9 suspended with cage; Transfer to CBCID

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 13 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 60 க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர்.

13 people lost their lives; 9 suspended with cage; Transfer to CBCID

இந்நிலையில்உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே  முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்னர். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுவிலக்கு அமலாக்க பிரிவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த கவிதா, பாண்டி, செல்வி,பாரதி, ஆனந்தன், சிவச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், மனோஜ் உள்ளிட்டோரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் விவரம்: சுரேஷ், பிரவீன், சேகர், கந்தன், ஆறுமுகம், ஜெகதீஷ், மணிகண்டன், மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா, நாராயணசாமி, ராமு, சுப்பிரமணி.