Skip to main content

கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் (படங்கள்)

Published on 10/09/2021 | Edited on 10/09/2021

 

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர். நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி இல்லாத நிலையில் வீடுகளிலேயே கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. புதுச்சேரி மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் உற்சவமூர்த்தி தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

 

இந்நிலையில் வீடுகளில் வைத்து வழிபாடு நடத்திய விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பட்டினம்பாக்கம் கடற்கரைக்கு கொண்டு வந்து கடலில் கரைத்தனர். அவர்களிடமிருந்து காவல்துறையினர்  பெற்று  உதவியாளர்களை வைத்து வாகனம் மூலம் எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்