

Published on 22/11/2018 | Edited on 22/11/2018
புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து விளக்குவதற்காக இன்று காலை சந்தித்தார். அப்போது பாதிப்புகள் குறித்தும், உடனடி நிவாரணம் மற்றும் நிரந்தர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் நிதியுதவி கோரி கோரிக்கை மனுவினை அளித்தார்.