திண்டுக்கல் மாவட்டத்திலேயே கொடைக்கானலில் உள்ள மேல்மலை கீழ்மலை பகுதிகளில்தான் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி உள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள பூம்பாறை, மன்னவனூர், போளூர் வில்பட்டி,
கிளவரை உள்பட பல மழை கிராமங்களில் உள்ள வீடுகள் இடிந்தும், ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் போடப்பட்ட பூண்டு, உருளை, பீன்ஸ், கேரட் போன்ற விவசாய பொருடகள் அழிந்தும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது அப்படியிருந்தும்கூட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆளுங்கட்சியினரும் மாவட்ட நிர்வாகமோ நேரில் சென்று ஆறுதல் கூறவோ, நிவாரண பொருட்கள் வழங்கவோ முன்வரவில்லை.
இதனால் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவுக்கும் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர் அதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொகுதி எம்எல்ஏவான ஐ.பி. செந்தில்குமார் கொடைக்கானலில் உள்ள மேல்மலை. கீழ்மலை பகுதிகளுக்கு உடனடியாக சென்று கடந்த ஒருவாரமாக அப்பகுதிகளில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து ஆறுதல் கூறியும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்குச் சென்று விவசாயிகளுக்கு ஆறுதல் கூறியும் அங்கங்கே ரோட்டு ஓரங்களிலும் கிராமங்களிலும் போக்குவரத்து இடையூறாக விழுந்து கிடக்கும் மரங்களையும் மின்கம்பங்களையும் அப் பகுதியில் உள்ள கட்சிக்காரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களையும் வைத்து சீர்படுத்தும் பணிகளையும் இறங்கி வருகிறார்.
அதோடு அப்பகுதி மக்களுக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லாததால் வத்தலகுண்டு, கொடைக்கானல், பெருமாள்மலை உள்பட சில பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட வாட்டர் டேங்க் லாரிகளை வாடகைக்கு பிடித்து மேல்மலை மற்றும் கீழ் மலை பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினசரி குடிநீரும் தொகுதி எம்எல்ஏவான ஐபி செந்தில்குமார் வழங்கி வருகிறார்.
அதோடு போக்குவரத்து சரியில்லாத பகுதிகளில் கூட ஜீப்பு மற்றும் டூவீலரில் சென்று வீடுகளை இழந்து நிற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியும், அதுபோல் மலை பகுதிகளில் உள்ள காடுகளுக்கு சென்றும் புயலால் பாதிக்கப்பட்ட மலை விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி வருகிறார். அதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக அதுவும் மலை கிராமக்களுக்கு முன் உரிமை அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வினைய்யிடம் வலியுறுத்தி இருக்கிறார் . அதோடு தொடர்ந்து மலை கிராம பகுதிகளில் முகாம் போட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.