Skip to main content

சென்னையில் 50 இடங்களில் இலவச 'வை-ஃபை'

Published on 17/08/2021 | Edited on 17/08/2021

 

chennai

 

சென்னையில் 'சீர்மிகு நகரம்' திட்டத்தின் கீழ் 50 இடங்களை தேர்வு செய்து அதில் தற்பொழுது 46  இடங்களில் WI-FI ஸ்மார்ட் கம்பங்கள் நடப்பட்டுள்ளது .சென்னை மெரினா கடற்கரை, அசோக்பில்லர், நடேசன் பூங்கா, தி.நகர் உள்ளிட்ட 46 இடங்களில் WI-FI கம்பங்கள் நடப்பட்டுள்ளது. நடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் 30 நிமிடங்களுக்கு இலவச WI-FI தொடர்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

WI-FI வசதியைப் பெறுவதற்கு மொபைல் எண்ணைப் பதிவு செய்து ஒடிபி மூலம் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ளலலாம். ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தகவல் தெரிந்துகொள்ளலாம். WI-FI வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கம்பங்களில் கூடுதல் வசதிகளும் இடம்பற்றுள்ளது. பேரிடர் காலங்களில் நடக்கும் விபத்துகளைக் கண்டறிந்து தகவல் தெரிவிக்கும் வசதி உள்ளது. அதேபோல் மழைக்காலங்களில் மழைபெய்யும் அளவைத் தெரிந்துகொள்ளலாம். வெள்ளப்பெருக்கின் பொழுது குறிப்பிட்ட பகுதியில் தேங்கும் நீரின் அளவையும் தெரிந்துகொள்ளலாம்.

 

 

சார்ந்த செய்திகள்