Skip to main content

மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம்... -நடத்தி வைத்த அமைச்சரின் அண்ணன்

Published on 20/10/2020 | Edited on 21/10/2020

 

 

கோவையில் செயல்பட்டு வரும் 'நல்லறம் அறக்கட்டளை' சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்  கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த மாற்று திறனாளி தொழிலாளி சுப்ரமணியம், தாய்-தந்தை இல்லாத ஆதரவற்றவர். இவருக்கு திருமணம் நடத்தி வைக்க, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ். பி. அன்பரசனை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். நடத்தி வைப்பதாக உறுதி தந்துள்ளார் அன்பரசன். 

 

இதனையடுத்து, திருமணத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க சொல்லி,  நல்லறம் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, ஆர்.எஸ்.புரம் 'அம்மா ஐ‌.ஏ.எஸ். அகாடமி' அருகிலுள்ள சித்தி விநாயகர் கோவிலில்,  சுப்ரமணியத்திற்கும் - ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவருக்கும் நல்லறம்  அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி. அன்பரசன் தலைமையில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்களுக்கு வீட்டுக்குத் தேவையான கட்டில், பீரோ,  சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட 101 வகை சீர்வரிசை பொருட்கள் புதுமணத் தம்பதியினருக்கு இலவசமாக வழங்கினார் அன்பரசன். இந்த இலவச திருமணத்தில் நல்லறம் அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், முருகவேல், அஞ்சுதா, மணிகண்டன், குமார் உட்பட புதுமண தம்பதியினரின் உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்த அன்பரசன், அமைச்சர் வேலுமணியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.