Skip to main content

ஆன்லைன் மூலம் மோசடி... நைஜீரிய வாலிபர் உட்பட 3 பேர் கைது!

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

hh

 

புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகர் 9வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி ஜனனி. கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில் சென்னை விமான நிலைய நிறுவனத்துக்கு கஸ்டமர்ஸ் சர்வீஸ் பணிக்கு ஆட்கள் தேவை என்று தகவல் வந்ததையடுத்து அந்த நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்தார். அப்போது அந்த நிறுவன பெண் அனுசிங் மற்றும் பங்கஜ் ஆனந்த், ஹேமா கோபால் ரத்தினம் ஆகிய 3 பேர் ஜனனியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு சிறுக சிறுக ஜனனியிடமிருந்து 16,48,680 ரூபாயை பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜனனி இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த லனன் குமாரை கைது செய்தனர்.

 

இதேபோன்று அன்லா ஜெயின் என்பவரிடம் கனடாவிலிருந்து போன் மூலம் தொடர்பு கொண்டு ரூ.41 லட்சத்து 71 ஆயிரத்தை மோசடி செய்த மணிப்பூரை சேர்ந்த ரோனால் சிங் என்பவரையும், அதேபோன்று சுைனனா நாரக்கிடம் கல்யாணம் செய்வதாக ஆன்லைன் ஆப் மூலம் தொடர்பு கொண்டு பேசிய கனடாவை சேர்ந்த மர்ம நபர், தான் டாக்டர் எனவும் சொந்தமாக மருத்துவமனை கட்டுவதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி அந்த பெண்ணிடம் ரூ.54 லட்சம் மோசடி செய்தார். இதுகுறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் அந்த நபர் நைஜீரியாவை சேர்ந்த இமானுவேல் என்பது தெரியவந்தது. இந்த 3 மோசடி வழக்கிலும் தொடர்புடைய 3 பேரை சைபர் கிரைம் போலீசார் டெல்லி சென்று கைது செய்து நேற்று புதுச்சேரிக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்