Skip to main content

மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசு... நான்குபேர் கைது!

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

 

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடற்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு புதுக்குடி கிராமத்தில்  அரசால் தடை செய்யப்பட்ட கடல் பசுவை பிடித்த மீனவர்கள் ஒரு பைபர் படகில் கரைக்கு கொண்டு வருவதாக  தகவல் கிடைக்க, புதுக்குடி மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியில் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அன்னலட்சுமி, திருப்புனவாசல் கடற்கரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரகுபதி மற்றும் காவலர்கள் கணேசன், ரெங்கநாதன் ஆகியோர் ரோந்து சென்று கண்காணித்தபோது புதுக்குடி சுடுகாடு கடற்கரை அருகே கடலில் நின்றுகொண்டிருந்த INDTN08MO909  என்ற பதிவெண் கொண்ட படகில் இருந்த படகின் உரிமையாளர் புதுக்குடி சுந்தராசு மகன் மாரிமுத்து (45),  மற்றும் படகில் இருந்த அதே ஊரைச் சேர்ந்த ராமு (48), நந்தகுமார் (49), ஜெகதீஷ் கண்ணன் (28) ஆகியோரை பிடித்து விசாரணை செய்து படகை சோதனை செய்தபோது சுமார் 4 அடி நீளத்தில் 100 கிலோ எடை கொண்ட கடல் பசு உயிருடன் படகில் இருந்தது.

அரசால் தடைசெய்யப்பட்ட கடல் பசுவை வெட்டி விற்பனை செய்வதற்காக வேட்டையாடி வைத்திருந்த உயிருடன் இருந்த கடல்பசுவை மீட்ட போலிசார் மீண்டும் கடலில் சென்று விட்டதுடன் தடைசெய்யப்பட்ட கடல்பசுவை பிடித்து வந்ததாக 4 மீனவர்களை கைது செய்ததோடு படகையும் கைப்பற்றி மேல் நடவடிக்கைக்காக வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் படுகொலை; பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Armstrong incident Bahujan Samaj party struggle

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்ததுள்ளது. இந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Armstrong incident Bahujan Samaj party struggle

கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த சென்னை கூடுதல் காவல் ஆனையர் அஸ்ரா கார்க் காரை பகுஜன் சமாஜ் கட்சியினர் வழிமறித்து போராட்டம் நடத்தினர். 

Armstrong incident Bahujan Samaj party struggle

மேலும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வெளியே அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இயக்குநர் பா. ரஞ்சித் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது. 

Next Story

குடும்பம் நடத்திய பெண் பிரிந்து சென்றதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
tragic decision taken by  man because woman  away

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பொம்மன்பட்டி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவ்வப்போது வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றித் திரிந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஒருவருடத்துக்கு முன்னர், சேலம் மாவட்டம், பூலாம்பட்டியைச் சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவரைக் கூட்டி வந்து மணிகண்டன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது அவருடன் குடும்பம் நடத்தி வந்த பெண் கடந்த 2-ஆம் தேதி சண்டையிட்டுக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, மணிகண்டனின் தந்தை பெரியசாமி அளித்த புகாரின் பேரில், வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.