Skip to main content

முன்னாள் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை; காவல்துறை விசாரணை

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

Former private school teacher passed away

 

சேலம் கோரிமேடு ஏ.டி.சி. நகர் செல்வபுரத்தைச் சேர்ந்தவர் தீபன் (32). இவருடைய மனைவி தீபா (28). தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீபன், அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தார். மதுப்பழக்கம் காரணமாக அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். 

 

கடந்த நான்கு மாதங்களாக கோரிமேட்டில் உள்ள ஒரு மீன் கடையில் தீபன் வேலை செய்து வந்தார். இவருக்கு, வேறு ஒரு பெண்ணுடன் முறையற்ற தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் செப். 28ம் தேதி இரவு தீபன் வழக்கம்போல மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதும் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். 

 

செப். 29ம் தேதி காலையில் தீபா எழுந்து பார்த்தபோது, மொட்டை மாடியில் உள்ள அறையின் முன்பு நிழலுக்கு போடப்பட்டு இருந்த கூரையில், வேட்டியால் தூக்கிட்டு தீபன் சடலமாகத் தொங்கினார். இதைப் பார்த்து தீபா அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த தகவலின்பேரில், நிகழ்விடம் விரைந்த அழகாபுரம் காவல்நிலைய காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

குடும்பத் தகராறில் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு பிரச்சனைகள் காரணமா? என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்