முன்னாள் பிரதமரும் சமூக நீதிக் காவலருமான வி.பி. சிங் பிறந்தநாள் இன்று. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அறிஞர்களும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் வி.பி. சிங் பிறந்தநாள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில், “முன்னாள் பிரதமர் திரு.வி.பி. சிங் அவர்களது பிறந்தநாளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த அப்புரட்சியாளர்க்கு என் புகழஞ்சலியைச் செலுத்துகிறேன். சமூகநீதிக்கான பணியை அச்சமின்றி முன்னெடுத்து, அனைவரையும் “இட ஒதுக்கீடு எங்கள் உரிமை" என ஓங்கி முழங்கச் செய்தவர் அவர்.
வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு அதிகாரமளிக்கும் இலக்கில் திரு. வி.பி. சிங் அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டவர்கள் ஆவர். திரு. வி.பி. சிங் அவர்களது சிந்தனைகள் மேலும் ஒளிமயமான, சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நம்மைத் தொடர்ந்து வழி நடத்தட்டும்.” எனத் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது, சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.