Skip to main content

சக்தி மசாலா நிறுவனத்திற்கு முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் பாராட்டு!!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

Former CBI director praises Shakti Masala

 

சக்தி மசாலா நிறுவனங்களின் ஒரு அங்கமான சக்திதேவி அறக்கட்டளையின்  22-வது ஐம்பெரும் விழா ஈரோடு சக்தி துரைசாமி திருமண மகாலில் 10ந் தேதி நடைபெற்றது.  இவ்விழாவில் டாக்டர் முத்துலட்சுமி விஸ்வநாதன் மற்றும் ஜெயா பழனிவேலு ஆகியோர்  குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் முனைவர் பி.சி துரைசாமி தலைமை வகித்து பேசினார். இந்திய புலனாய்வுத்துறை முன்னாள் (சி.பி.ஐ) இயக்குநர் டாக்டர் டி.ஆர். கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

 

மேலும் மருத்துவத் துறையில் சிறப்பாக சேவை புரிந்துவரும் கோவை காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்  டாக்டர். பி.ஜி. விஸ்வநாதன் மற்றும்  கோவை ஜீரண மண்டல மருத்துவர் மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். சி. பழனிவேலு ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்  விருதுகளை வழங்கினார். சக்திதேவி அறக்கட்டளையின் ‘தளிர்’திட்டம் மூலம் மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்று சிறப்பாக பராமரித்து வளர்த்து வந்த தனிநபர்கள், நிறுவனங்களுக்கு மரங்களின் காவலர் விருதினையும், சக்திதேவி அறக்கட்டளையின் ஆண்டு மலரையும் வெளியிட்டு சேவை அமைப்புகளுக்கு நிதி உதவி, உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை,  2020-21-ஆம் கல்வி ஆண்டின்;  12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்று முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. 

 

சக்தி மருத்துவமனை மருத்துவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி அவர் பேசும்போது, “சக்தி மசாலா நிறுவனத்தினர் கிராமப்புறத்தில் இருந்து வந்து இவ்வளவு வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்றால், அதற்கு அவர்களின் கடின உழைப்பு, நாணயம், நம்பிக்கை. அதே சமயத்தில் பணிவு, மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பான்மை. அதேபோல், டாக்டர் விஸ்வநாதன், டாக்டர் பழனிவேலு அவர்களும் கிராமப்புறங்களிலிருந்து வந்து பல்வேறு வளர்ச்சி அடைந்து உள்ளனர். கூட்டுக் குடும்பம் இருந்தால் அன்பு, பாசம், பொறுமை இது எல்லாம் கிடைக்கும். சக்தி தேவி அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ் சேவை மூலம் பல உயிர்கள் தினசரி காப்பாற்றப்படும். இதன் ஆசி, அவர்களின் குடும்பத்திற்கு வந்து சேரும்” என்றார். 

 

பாரதி வித்யா பவன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் டாக்டர் எல்.எம். ராமகிருஷ்ணன், அரிமா இயக்கத்தின் முன்னாள் கூட்டு மாவட்டத் தலைவர். என். முத்துசாமி, மாநில அரசின்  டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற சித்தோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ச.ரத்தினசபாபதியை பாராட்டி நினைவுப் பரிசுகளையும், வழிகாட்டி திட்டம் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி, வாழ்த்துரை வழங்கினர்.  விழாவில் மலை பகுதியான நீலகிரி மாவட்ட மக்களின் நலனுக்காக, ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் நன்கொடையாக வழங்கப்பட்டது.

 

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு 2 டயாலிஸ்  இயந்திரம் வாங்க ரூபாய் 13 லட்சத்து 88 ஆயிரத்து 817 ரூபாய் மற்றும் 2020–21 ம் கல்வி ஆண்டில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில்  முதல், இரண்டாம் இடம்பெற்ற 150 மாணவ , மாணவியர்க்கு கல்வி உதவித்தொகை,  பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்கல்வி படிக்கும் 505 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை என மொத்தம் 1 கோடியே 20 ஆயிரத்து 567 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.  விழாவில் நிர்வாக இயக்குநரான டாக்டர் சாந்தி துரைசாமி, செந்தில்குமார்,  தீபா செந்தில்குமார், எம்.இளங்கோ,. சக்திதேவி இளங்கோ, ஜி.வேணுகோபால், முக்கிய பிரமுகர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நான்கு நாட்களாக மின்தடை; இருளில் மூழ்கிய 50 மலைக் கிராமங்கள்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Power outage for four days; 50 hill villages plunged into darkness

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலைக்கிராமங்களுக்கு சத்தியமங்கலம், ராஜன் நகர்ப் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு திம்பம் மலைப்பாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்கள் முன்பு ஆசனூர் அடுத்த மாவள்ளம் பிரிவு அருகே மின்கம்பி மீது மரம் விழுந்து மின்கம்பி துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரமும் தடைபட்டது. மலைக்கிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் 4- வது நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.

மலைக்கிராமங்களான கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர்,கோட்டமாளம், மாவநத்தம், பெஜலட்டி,காளிதிம்பம்,தடசலட்டி என 50 மேற்பட்ட மலைக் கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது .மின் தடையால் ஊராட்சிக்குச் செந்தமான மின் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர்.மின் மோட்டார்களை இயக்க முடியாததால் அருகே உள்ள குட்டை மட்டும் ஆங்காங்கே பள்ளத்தில் தேங்கியுள்ள நீரை எடுத்து குடித்து வருகின்றனர்.

இதனால் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 3 நாட்கள் மின்சாரம் இல்லாததால் மாவநத்தம், தடசலட்டி, இட்டரை ஆகிய பகுதிகளில் குட்டை நீரைக் குடித்து வாந்தி, பேதி ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் 4 நாட்களாக எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவும், சத்தியமங்கலம் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகக் கூறுகின்றனர். மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மாயாற்றில் வெள்ளப்பெருக்கு; துண்டிக்கப்பட்ட கிராமம்  - மக்கள் அவதி 

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Due to the flood in river traffic in Paris was cut off and  villagers suffer

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தெங்குமரஹாடா மலைக்கிராமம் உள்ளது. இந்த மலைக்கிராமத்தை சென்றடைய மாயாற்றை கடக்க வேண்டும். மலைக்கிராமத்தில் வசிக்கும் வியாபாரிகள், பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சத்தியமங்கலம் வந்து செல்வது வழக்கம். மழைக்காலங்களில் மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும். அந்தச் சமயம் ஆபத்தை உணராமல் பரிசலில் மக்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கோவை, நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாயாற்றில் கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று(17.7.2024) காலை மாயாற்றில் 10 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருந்த நிலையில் இன்று(18.7.2024) காலை 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டப்படி நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் இன்று 2-வது நாளாக மாயாற்றில் பரிசல் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பரிசலை முற்றிலும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.  இதனால் இன்று 2-வது நாளாக கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் முடங்கி போய் உள்ளனர். இதனால் தெங்குமரஹாடா, அல்லி மாயார் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.