சென்னையில் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்து நிகழ்ந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தில் இருந்து பரங்கிமலை செல்லும் வகையில் பறக்கும் ரயில் வழித்தடத்திற்கு மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியில் பறக்கும் ரயில் சேவைக்கு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் இரு தூண்களுக்கு இடையே உள்ள பகுதி இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது சம்பவ இடத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.