தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (03.12.2024) வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நேற்று (02.12. 2024) காலை, வடதமிழக உள் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வடதமிழக மற்றும் தெற்கு கர்நாடக உள் பகுதிகளில் நிலவியது.
புதுச்சேரி மாநிலம் மலட்டாறு நிரம்பியுள்ளதால் அந்த பகுதியில் வெள்ள நீர் வெளியேறி பண்டகசோழநல்லூர், சொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மனப்பட்டு, கரையான்புத்தூர் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்த காரணத்தினால் பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சில இடங்களில் டிராக்டர் மூலமாகவும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. புயல் கடந்து இரண்டு நாட்கள் ஆகிய பின்னரும் புதுவையில் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது. தொடர்ச்சியாக மீட்புப் பணிகளும் நடைபெற்று வருகிறது.