Published on 09/08/2018 | Edited on 09/08/2018
![FLOOD](http://image.nakkheeran.in/cdn/farfuture/NC0LfNiJGGFT2lOar-R-nDB4ny31ibbkSPmlkWN9pb4/1533843892/sites/default/files/inline-images/maxresdefault%20%281%29_10.jpg)
கர்நாடக மற்றும் கேரளவில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணை முழுகொள்ளளவை எட்டியுள்ள நிலையில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் ஒகேனக்கல்லில் குளிக்க மற்றும் பரிசல் சவாரி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேட்டூரிலிருந்து 30,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.
இதனால் மேட்டூர், சேலம், சங்ககிரி, எடப்பாடி காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர், சேலம், சங்ககிரி, எடப்பாடி காவிரி கரையோர மக்கள் பத்திரமாக இருந்துகொள்ள வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி அறிவித்துள்ளார்.