Skip to main content

ஒருபுறம் வெள்ளம் - மறுபுறம் வறட்சி:  அ.தி.மு.க அரசின் லட்சனம் 

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
ko

 

காவிரியில் ஒரு புறம் வெள்ளப் பெருக்கெடுத்து கடலில் வீணாகிக் கலக்கிறது தண்ணீர், மற்றொருபுறத்தில் ஆளும் அதிமுக அரசின் அலட்சியத்தினால் கால்வாய்களும், ஏரிகளும், வாய்க்கால்களும் வறண்டு காய்ந்திருக்கின்றன. 

 

ko

 

இந்திய பிரதமர் நரேந்திரமோடி, கர்நாடக முதல்வர் குமாரசாமி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்களின் சுயநல தடைகளை உடைத்தது இயற்கை.  கனமழைையினால் காவிரிநீர் மேட்டூர் அணையின் கொள்ளளவை இரண்டு முறை தொட்டு விட்டது. ஐந்தாண்டுகளுக்கு பிறகு  இரண்டாவது முறை 120 அடியை தொட்டுள்ளது. ஐம்பது ஆண்டுகளாக போராடிய டெல்டா விவசாயிகள் இந்த நிகழ்வை கண்டு மகிழ்ச்சியடைந்து சுறுசுறுப்பானர்கள்.  அந்த மகிழ்ச்சி இன்னும் கடைமடை விவசாயிகளுக்கு எட்டவில்லை, மற்ற விவசாாயிகளுக்கு  நிலைக்கவில்லை.

 

கரனம் என்ன ?

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக ஜீலை மாதம்,19 தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதே மாதம் 22 தேதி கல்லணை திறக்கப்பட்டு கடைமடைக்கு இன்றுவரை தண்ணீர் போகவில்லை. 

 

அமைச்சர் ஒ.எஸ் மணியன் ஊரான தலைஞாயிறு, பஞ்சநதிக்குளம், நாலாம் சேத்தி உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை. குடிநீர் பஞ்சத்தால் பொதுமக்கள் போராட்டத்தில் உள்ளனர். அதே வேலையில் தண்ணீர் வரத்து அதிகரித்து அபாய எச்சரிக்கைையோடு , கிடைத்த மொத்த தண்ணீரையும், கொள்ளிடம் ஆற்றின் மூலம் கடலுக்கு அனுப்புகின்றனர். மூன்று நாட்களில் காவிரி, கொள்ளிடம் ஆற்றின் மூலம் கடலில் கலந்த தண்ணீரின் அளவு 8 டி.எம்.சி இருக்கும் என்கிறார்கள். ஆய்வு பெற்ற நீர்ஆதார துறை அதிகாரிகள் . 

 

ko

 

நாகை , தஞ்சை மாவட்ட கொள்ளிட கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடபட்டிருப்பதோடு, மாவட்டத்திற்கு ஐந்துக்கும் மேற்பட்ட குழுக்களாக நூற்றுக்கணக்கான காவலர்கள் காவல் பணியில் இறக்கி விடப்பட்டிருக்கின்றனர். அதே வேலையில் நாகை மாவட்டத்தின் பெரும்பாலான ஏரிகள் வாய்க்கால், குளங்களுக்கு தண்ணீர் செல்லாமல் காய்ந்து கிடக்கிறது. திருவாருர் மாவட்டத்தின் ஏரிகளுக்கும் போகவில்லை. பொதுமக்கள் தண்ணீர் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக  ஒரு மாவட்டத்தில் ஒரு புறம் வெள்ளம் மறுபுறம் வரட்சியால் பாதிப்பு. எப்படி இந்த நிலைமை உருவானது. 

 ”துார் வாரும் பணிகள் நடைபெறாததால் டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லை, கொள்ளிடத்தில் திறந்துவிட்டு விட்டனர்.” என்கிறார்கள் விவசாயிகள்.

 

ko

 

”துார்வாரும் பணிகள் குறித்த புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. அந்தந்த பகுதி விவசாயிகள் கொண்ட குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு துார்வாரும் பணி நிறைவேற்றப்படுகிறது. பதினோரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நேரடி ஆய்வு மூலம் சோதித்து உறுதி செய்யப்படுகிறது” என்று சத்தியம் செய்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள்.

 

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, வாய்க்கால்களில் வறட்சி என்பதுதான் காவிரி டெல்டாவின் இன்றைய அவலநிலையாக உள்ளது.  கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்ட மறுநாளே பகல்லணைக் கால்வாயில் கல்விரயான் பேட்டை அருகில் உடைந்தது. கல்லணை அருகே உள்ள செங்கப்பட்டி சானடோரியம், உள்ளிட்ட பெரும்பால கிராமங்களில் உள்ள 108 ஏரிகள் வறண்டுகிடக்கிறது. ஆனால் கொள்ளிடத்தில் கரை கொண்ட அளவு தண்ணீர் க டலுக்கு செல்கிறது.

 

இது குறித்து விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான பாலகுரு கூறுகையில், " ஐம்பது ஆண்டு காலமாக போராடிய போது கிடைக்காத தண்ணீர், 6 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் மக்கள் பட்ட கஷ்டத்திற்கு இயற்கை கொடையாக கொடுத்த தண்ணீரை கொண்டு நிலத்தடி நீரை உயர்த்த அரசு தவறிவிட்டது. கிடைத்த தண்ணீரை கடலுக்கு அனுப்பி விட்டது அதிமுக அரசு . நீர் நிலைகள் தூர் வாரவில்லை, தண்ணீர் ஆறுகளில், வாய்க்கால்களில் போக முடியாத நிலைமை. தூர் வார ஒதுக்கப்பட்ட நீதிகளை முழுமையாக சுருட்டியதன் விளைவு தான், ஒரு புறம் வறட்சி, மறு புறம் வெள்ளம், " என்கிறார்.

சார்ந்த செய்திகள்