Skip to main content

பாறை இடுக்கில் சிக்கிய மிதவை கப்பல்; கூடங்குளத்தில் பரபரப்பு

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

A floating ship stuck on a rock; There is excitement in Kudankulam

 

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற் பகுதியில் பாறை இடுக்கில் சிக்கிக்கொண்ட மிதவை கப்பல்களை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருவதால் அதிக திறன் கொண்ட இழுவை கப்பலை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

 

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளுக்கான ஸ்டீம் ஜெனரேட்டர் உற்பத்திக்கலன் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 'மாருதி' என்ற மிதவை கப்பல் மூலமாக கூடங்குளம் அணுமின் நிலையப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது கலன்களை எடுத்து வந்த மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டது. இதனை மீட்கும் பணி நேற்று காலையிலிருந்து நடைபெற்று வருகிறது.

 

இதற்கிடையே கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை துறைமுகப் பகுதியில் இருந்து சிறப்பு வல்லுநர்கள் குழு இன்று காலை அந்த பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டது. மிதவை படகு மூன்று இடங்களில் சேதமடைந்துள்ளதால் அவற்றை சரி செய்யும் பணியில் மும்பையைச் சேர்ந்த குழுவினர் ஈடுபட்டனர். தொடர்ந்து இழுவை படகின் மூலம் மிதவை கப்பல் இழுக்கப்பட்டது. ஆனால் அப்பொழுது கயிறு அறுந்து விட்டது. தற்பொழுது அதிக விசைத் திறன் கொண்ட இழுவை படகை மும்பை துறைமுகத்திலிருந்து வரவழைத்து தான் மிதவை கப்பலை எடுக்க முடியும் என வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று சிக்கிய மிதவை கப்பல் தற்பொழுது வரை அகற்றப்படாதது அங்கு சிறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூலாக வந்து கொள்ளை; சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Cool and booty; Police are investigating with CCTV footage

 

கேஸ் சிலிண்டர் பழுது நீக்குவதாக கூறி தூத்துக்குடியில் வீட்டிற்கு வந்த நபர் பெண்ணிடம் நகையை பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருயுகேள்ளது ஆறுமுகநேரி. இந்த பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவருடைய கணவர் ராஜ்குமார் வெளியூரில் பணியாற்றி வரும் நிலையில் சாந்தி தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அந்தப் பகுதியில் சாலையில் நடந்து வந்த இளைஞர் ஒருவர், கேஸ் சிலிண்டர் பழுது பார்ப்பதாக கூறியுள்ளார். அதற்கு சாந்தி, தங்கள் வீட்டில் பழுது பார்க்கும் வேலை இல்லை என பதில் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து நகன்ற அந்த நபர் மற்ற வீடுகளில் கேஸ் சிலிண்டர் பழுது பார்க்கும் வேலை இருக்கிறதா என கேட்டுள்ளார்.

 

அதன் பிறகு சாந்தி தனிமையில் இருப்பதை தெரிந்து கொண்ட அந்த இளைஞர் மீண்டும் வாசலில் நின்றுள்ளார். தொடர்ந்து வெளியே வந்த சாந்தி என்ன என கேட்டபோது நகைகளை கழட்டி தருமாறு கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளார். சாந்தி கூச்சலிட்ட நிலையில் கையில் இருந்த கத்தியால் சாந்தியினுடைய கையில் கீறிவிட்டு அவர் கழுத்தில் இருந்த 16 சவரன் தாலிச் சங்கிலி மற்றும் ஐந்து சவரன் செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.

 

தொடர்ந்து ரத்த காயங்களுடன் வெளியே வந்த சாந்தியை அக்கம்பக்கத்தினர் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்ததில் மர்ம நபர் வரும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபர் நகைகளை கொள்ளையடித்ததோடு மட்டுமல்லாமல் வீட்டிற்கு முன் இருந்த இருசக்கர வாகனத்தையும் எடுத்துக்கொண்டு தப்பிக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

பேருந்திற்குள் குடை பிடித்தபடி பயணம்

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

People travel with umbrellas inside the bus!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் மேற்கூரை வழியே மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. 

 

தூத்துக்குடி மாவட்டம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (19-11-23) காலை 11 மணி அளவில் அத்திமரப்பட்டி கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று மழை பெய்ததால் பேருந்து மேற்கூரை வழியே பேருந்தின் உள்ளே மழை நீர் பெய்தது. 

 

இதனால், அவதியடைந்த பயணிகள் பலர் மழையில் நனைந்தபடியும், பேருந்தின் ஓரமாக நின்று கொண்டும் பயணம் செய்தனர். இன்னும் சில பயணிகள் பேருந்திற்குள் குடை பிடித்துக் கொண்டு பயணம் செய்தனர். இதில் அவதியடைந்த மக்கள் கூறியதாவது, ‘தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பேருந்துகள் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் இருக்கிறது. இதனால், அந்த பேருந்திற்கு பதில் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.