Skip to main content

உருவானது மகா புயல்;மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்- ஆர்பி.உதயகுமார்

அரபிக்கடலில் உருவான புயலுக்கு மகா என பெயரிடப்பட்டுள்ளது. லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ள 'மகா' புயல் நாளை அதி தீவிர புயலாக மாறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுவை மற்றும் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

 

Fishermen should not go to sea-ar.uthaykumar

 

இந்நிலையில் இன்று எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த  வருவாய்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறுகையில்,

மகா புயல் லட்சத்தீவு கடல் பகுதியை கடந்து தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே குமரி கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து மீட்பு குழுவினர் தயராக வைக்கப்பட்டிருக்கிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. லட்ச தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் கூறினார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !