சென்னை மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று (12.04.2023) ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை காவல்துறையுடன் சென்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கினர். இதனைக் கண்டித்து அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மீன்களை சாலையில் கொட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.