Skip to main content

நான்கு நாட்கள் தேடியும் கிடைக்காத மீனவர், கதறும் உறவினர்கள்!

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

Fisherman not found after four days of searching; Screaming relatives

 

நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கி மாயமானார். காணாமற்போன மீனவரை மீட்டுத்தருமாறு மத்திய - மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கண்ணீரோடு கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நாயக்கர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து.

 

இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த இரண்டாம் தேதி இரவு நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆனந்து, முருகவேல், ரவி, செல்வகுமார் உள்ளிட்ட 11 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கடந்த 5ஆம் தேதி இரவு சென்னையை அடுத்து 40 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து ஆனந்த் என்பவர் கடலுக்குள் தவறி விழுந்திருக்கிறார்.

 

இந்திய கடலோர காவல்படையினரும் மீனவர்களும் கடந்த நான்கு நாட்களாக  தேடியும் அந்த மீனவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொழிலுக்குச் சென்ற மீனவர்களும் ஏமாற்றத்துடன் இன்று (09.07.2021) நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தனர். நாகப்பட்டினம் கடலோர காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்துவருகின்றனர். மாயமான ஆனந்திற்கு 2 மகன்கள் உள்ளனர். மாயமான மீனவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Announcement of Communist Party of India candidates

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார். திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூரில் கே. சுப்பராயன் மீண்டும் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும் போட்டியிட உள்ளனர். 

Next Story

தமிழக மீனவர்கள் 21 பேருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு! 

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
21 fishermen of Tamil Nadu have been sentenced to judicial custody

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (16.03.2024) காலை 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே இன்று (17.03.2024) மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதே சமயம் மீனவர்கள் 21 பேரை சிறைப் பிடித்து ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் 21 பேரையும் மார்ச் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டதுடன் இவர்களை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் தமிழக மீனவர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல நாள் போராட்டங்கள் நடத்தி இருந்தனர். தமிழக அரசும் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடிதங்கள் எழுதியிருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 10/03/2024 அன்று 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.