Skip to main content

ஜி.எஸ்.டி-க்கான முதல் வழக்கு நெல்லையில்...!!

Published on 12/11/2018 | Edited on 12/11/2018

 

gst

 

ஜி.எஸ்.டி.எண் இல்லாமலே, பொருளுக்கான தொகையையும், அதற்கு உண்டான வரி தொகையையும் பெற்றுக் கொண்டு பொருட்கள் விற்பனை செய்ததாக நெல்லை மாவட்டத்தில் ஜி.எஸ்.டி.க்காக வழக்கு பதிவாகியுள்ளது. இது தமிழகத்திலேயே முதன்முறை என்பது தான் ஆச்சர்யப்படத் தக்க விடயமே.!

 

   
மத்திய, மாநில அரசுகளின் பல அடுக்கு வரிகளுக்குப் பதிலாக, இந்தியா முழுமைக்கும் பொருந்துமாறு வரி விதிப்பை கடந்தாண்டு ஜூலை முதல் தேதியன்று அறிமுகப்படுத்தியது மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசு. ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஐ.ஜி.எஸ்.டி ஒரு கவுன்சிலால் நிர்வகிக்கப்பட்டு இருக்க, அதன் தலைவராக மத்திய நிதி அமைச்சர் இருப்பார் என அரசியலமைப்பு 122 வது திருத்தச் சட்டத்தின் படி சட்டத்திருத்தமும் கொண்டு வந்தது அரசு. இதன் மூலம் உற்பத்தி செய்யும் பொருளின் விலைகள் குறைவடையும். அது நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும் எனவும் சாதகங்களை பட்டியலிட்டாலும், ஜி.எஸ்.டி.க்கான எதிர்ப்பே இங்கு அதிகம். இந்நிலையில், இந்த ஜி.எஸ்.டி. ஓராண்டை கடந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சென்னல்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் வேல்முருகன், " நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்படும் தனியார் கம்பெனியில் ஆஸ்பெட்டாஸ் சீட் போன்ற பொருட்கள் வாங்கியதில் பில்லில் ஜி.எஸ்.டி எண் இல்லாமல் அதற்கான பணத்தை எடுத்துக்கொண்டதாக" புகார் கொடுத்ததின் அடிப்படையில் நெல்லை பெருமாள்புரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை வருகின்றனர். இது தமிழகத்தில் ஜி.எஸ்.டி.க்காக வழக்குப் பதிவாகியுள்ளது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

gst

  

 

gst

 

"வீட்டின் கட்டுமானத் தேவைக்காக 5 ஆஸ்பெட்டாஸ் சீட்டுகளும், பைப் உள்ளிட்ட இதர சில்லறை சாமான்களையும் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள துதியின் கோட்டை சர்ச்சிற்கு எதிர்புறம் இருக்கும் இரும்பு வணிகம் செய்யும் ஷபி டிரேடர்ஸில் சனிக்கிழமையன்று மாலை வேளையில் ரூ.14,800 கொடுத்து வாங்கினார். சாமான்களை எடுத்து செல்லும் வழியில் விற்பனை வரித்துறையினர் வந்துவிட்டால் ரூ.9410க்கு ஒரு பில்லையும், நாங்கள் கொடுத்த மொத்த தொகைக்காக தனியாக ரூ.8670, ரூ.6130க்கு என இரு பில்லைக் கடைக்காரர்கள் கொடுத்திருந்தார்கள். எதற்கு இத்தனை பில்கள்..? ஜி.எஸ்.டி.எண் இல்லாமலே வரி போட்டிருக்கிறீர்கள்..? நாங்க கொடுத்தது ரூ.14800 அதற்குண்டான தொகைக்கு ஒரே பில்லாக் பில்லைக் கொடுங்கள். எனக் கேள்வி கேட்டதற்கு " நாங்க வழக்கமாக அப்படித் தான் கொடுப்போம்." என மிரட்டும் தொணியில் பேசவே அருகிலுள்ள பெருமாள்புரக் காவல் நிலையத்தில் ஜி.எஸ்.டி.எண் இல்லாமலே பணத்தை எடுத்துக்கொண்டதாக புகார் கொடுத்தோம். ஐ.பி.சி.420ல் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். வழக்கறிஞரான எங்களுக்கே இந்த நிலை என்றால்..? சாமானியரின் நிலை..? தமிழகம் முழுவதும் ஜி.எஸ்.டி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் " என்கிறார் சீனியர் வழக்கறிஞரான ராமசுப்பு. இதனால் நெல்லையில் பரப்பரப்புத் தொற்றியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்