Skip to main content

அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பம்!

Published on 25/07/2021 | Edited on 25/07/2021

 

First application to join Government Arts & Science Colleges tomorrow!

 

கல்லூரிக் கல்வி இயக்ககம் இன்று (25/07/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2021- 2022) விண்ணப்பங்களை  www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.

 

நாளை (26/07/2021) முதல் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation centre-AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து 'AFC' மையங்களிலும் போதிய அளவில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

 

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பத்தாரர்கள் Debit Card/Credit Card/Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணம் மட்டும் ரூபாய் 2 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணமாக 48 ரூபாயும், பதிவு கட்டணமாக 2 ரூபாயும் செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

 

இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai- 6" என்ற பெயரில் 26/07/2021 அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். 

 

மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம்." இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களிடம் 10,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

College principal suspended for accepting Rs 10 bribe from students

 

நீலகிரியில் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களிடமே பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் கல்லூரியின் முதல்வரும், இணைப் பேராசிரியர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களிடம் கல்லூரியின் முதல்வர் அருள் ஆண்டனி பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்குவதற்கு அனுமதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சம் பெற்றுக்கொண்டு செயல்பட்டதாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதேபோல் அதே கல்லூரியில் தாவரவியல் இணைப் பேராசிரியராக இருந்த ரவி என்பவர் மாணவர்கள் டிபார்ட்மெண்ட் மாறுவதற்கு லஞ்சம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

 

 

 

Next Story

சனாதனம் குறித்த சுற்றறிக்கை; வாபஸ் பெற்ற கல்லூரி நிர்வாகம்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

 Circular on Sanatanam; The college administration withdrew

 

அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி பேசியதிலிருந்து சனாதனம் குறித்த பேச்சுக்கள் பேசுபொருளாகியிருக்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நேற்று திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில், மாணவர்கள் சனாதனத்தை எதிர்த்து கருத்துக்களைப் பேச வேண்டும் எனக் கல்லூரி முதல்வர் மாணவர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, சனாதன எதிர்ப்பு குறித்த கருத்தரங்கு ஒன்று திமுக சார்பில் நடைபெற இருக்கிறது. இதில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.

 

இதனையொட்டி திருவாரூரில் செயல்பட்டு வரும் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜாராம் அனைத்து துறைத் தலைவர்களுக்கும், வகுப்பில் மாணவர்களிடம் வாசிக்கும்படி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் 'கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சனாதன எதிர்ப்பு பற்றிய தங்கள் ஆழ்ந்த கருத்துக்களை அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று மாலை 3 மணி அளவில் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டது.

 

 Circular on Sanatanam; The college administration withdrew

 

அது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 'எதிர்ப்பு' என்ற வார்த்தை மட்டும் நீக்கப்பட்டு மீண்டும் சுற்றறிக்கை கொடுக்கப்பட்டது. இதற்கான விளக்கமும் கல்லூரி தரப்பு கொடுத்திருந்தது. இந்தநிலையில் சனாதனம் குறித்து அனுப்பப்பட்ட இரண்டு சுற்றறிக்கைகளையும் வாபஸ் பெறுவதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.