Skip to main content

கிரேன் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
A fire broke out in a truck carrying a crane

தூத்துக்குடியில் கிரேன் ஏற்றி வந்த லாரி ஒன்று நடு சாலையில் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு சொந்தமான லாரி ஒன்று கிரேன் ஒன்றை ஏற்றிக்கொண்டு மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது குறுக்குசாலை என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் திடீரென தீ பிடித்தது. பின்பகுதியில் எரியத் தொடங்கிய தீயானது லாரியின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.

உடனடியாக லாரி ஓட்டுநர் இதை அறிந்து லாரியை நிறுத்தி தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் முடியாததால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் லாரி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. குறுக்குசாலை பகுதியில் நடந்த இந்த எதிர்பாராத தீ விபத்து சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

விருந்து பரிமாறிய  கனிமொழி; மகிழ்ச்சியில் உடன்பிறப்புகள் ! 

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Kanimozhi fed the DMK who worked for victory

நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை டெபாசிட்டை காலி செய்து பிரமாண்ட வெற்றியைப் பெற்றார். வெற்றி பெற்றதை அடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல் எம்.பி.யாக களமிறங்கினார் கனிமொழி.  ஓட்டு கேட்கப் போகும் போது எப்படி ஒவ்வொரு பகுதியாகச் சென்றாரோ அதே போல அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 

Kanimozhi fed the DMK who worked for victory

இதனையடுத்து, கனிமொழி எம்.பி. தனது வெற்றிக்காக கடுமையாக உழைத்த திமுகவினருக்கு விருந்து கொடுத்து மகிழ்விக்க விரும்பினார். அதன்படி திமுக தொண்டர்களுக்கு  இன்று தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியால் மஹாலில்,  சைவம் மற்றும்  அசைவ விருந்து வழங்கினார். தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விருந்து வழங்கப்பட்டது.  விருந்தில் கலந்து கொண்ட அனைத்து  நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் பரிமாறி, அவர்களின் நலம் விசாரித்தார்.

Kanimozhi fed the DMK who worked for victory

வயதான மூத்த பெண்மணிகள் சிலர், கனிமொழியிடம் கோரிக்கை மனுக்களும் கொடுத்தனர். சுமார் 8,000 பேர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.  அவர்களுடன் அமர்ந்து கனிமொழியும் சாப்பிட்டார்.  கனிமொழியின் விருந்து வைபவமும் உபசரிப்பும் கண்டு மிகுந்த உற்சாகமானர்கள். இந்த விருந்து வைபத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story

'ஒரு மாதத்தில் திரும்பத் தந்து விடுகிறேன்' - கடிதம் எழுதிவைத்துவிட்டு கொள்ளை

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
 'I will give it back in a month' - robbery after writing a letter

'உங்கள் வீட்டில் கொள்ளையடித்த பணம், நகைகளை ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன்' எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் ஊராட்சி ஐந்தாவது வார்டு பகுதியில் வசித்து வருபவர் சித்திரைச் செல்வன். சென்னையில் உள்ள தன்னுடைய மகனைப் பார்க்க வேண்டும் என்பதற்காக  சித்திரைச் செல்வனும் அவரது மனைவியும் சென்றுள்ளனர். வீட்டின் சாவியை அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவரிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வி வீட்டை சுத்தம் செய்ய வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக சித்திரச் செல்வனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. காவல்துறை நடத்திய விசாரணையில் பீரோவில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.

 'I will give it back in a month' - robbery after writing a letter

மேலும் அங்கு ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டது. அதில் 'என்னை மன்னித்து விடுங்கள் நான் இன்னும் ஒரு மாதத்தில் கொள்ளையடித்த பணம், நகையைத் திரும்ப தந்து விடுகிறேன். என் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லை' என எழுதப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.