Skip to main content

நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் நிகழ்ச்சி மேடை அருகே தீ விபத்து; அதிகாரிகள் விசாரணை

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

 Fire breaks out near Nirmala Sitharaman stage; Officials investigate

 

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் வரும் ஐந்தாம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அருங்காட்சியகத்தை தொடங்கி வைக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி மேடையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில், திடீரென தீ விபத்து ஏற்பட்டதில், அந்தப் பகுதியில் இருந்த பனை மரங்கள் மற்றும் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஸ்ரீவைகுண்டம் அருகே பொன்னன்குறிச்சி என்ற பகுதியில் திடீரென நேற்று மாலை தீவிபத்து ஏற்பட்டது. இந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. 2020 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு தெரிவித்தபடி ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட அகழாய்வுப் பொருட்களை இங்கே வைத்து அருங்காட்சியகம் அமைப்பதற்கான முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கான தொடக்க விழா வரும் ஐந்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்தப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விருந்து பரிமாறிய  கனிமொழி; மகிழ்ச்சியில் உடன்பிறப்புகள் ! 

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Kanimozhi fed the DMK who worked for victory

நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை டெபாசிட்டை காலி செய்து பிரமாண்ட வெற்றியைப் பெற்றார். வெற்றி பெற்றதை அடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல் எம்.பி.யாக களமிறங்கினார் கனிமொழி.  ஓட்டு கேட்கப் போகும் போது எப்படி ஒவ்வொரு பகுதியாகச் சென்றாரோ அதே போல அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 

Kanimozhi fed the DMK who worked for victory

இதனையடுத்து, கனிமொழி எம்.பி. தனது வெற்றிக்காக கடுமையாக உழைத்த திமுகவினருக்கு விருந்து கொடுத்து மகிழ்விக்க விரும்பினார். அதன்படி திமுக தொண்டர்களுக்கு  இன்று தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியால் மஹாலில்,  சைவம் மற்றும்  அசைவ விருந்து வழங்கினார். தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விருந்து வழங்கப்பட்டது.  விருந்தில் கலந்து கொண்ட அனைத்து  நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் பரிமாறி, அவர்களின் நலம் விசாரித்தார்.

Kanimozhi fed the DMK who worked for victory

வயதான மூத்த பெண்மணிகள் சிலர், கனிமொழியிடம் கோரிக்கை மனுக்களும் கொடுத்தனர். சுமார் 8,000 பேர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.  அவர்களுடன் அமர்ந்து கனிமொழியும் சாப்பிட்டார்.  கனிமொழியின் விருந்து வைபவமும் உபசரிப்பும் கண்டு மிகுந்த உற்சாகமானர்கள். இந்த விருந்து வைபத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story

ஜூலை 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்!

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
July 23 central budget presentation

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றிப்பெற்று 3 வது முறையாக மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் ஜூலை 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 23 ஆம் தேதி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது முழுபட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. 

தேசிய ஜனநாயக் கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இருவரும் தங்களது மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர். இது நாடாளுமன்ற பட்ஜெட்டில் எந்த மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரும் எனப் பலரும் எதிர்பார்க்கப்படுகின்றனர். மேலும் விலை வாசி உயர்வு, வேலை வாய்ப்பு இன்மை தொடர்பான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.