Published on 05/07/2022 | Edited on 05/07/2022
சென்னையில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நோய்த்தடுப்பு பணிக்க, கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.
இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிகவளாகம், திரையரங்கம், மார்க்கெட் போன்ற இடங்களில் முகக்கவசங்கள் அணியாவிடில் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும். அங்காடிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.