திரைப்பட இயக்குநர் ரஞ்சித் சார்பில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் கஸ்பா-பி பகுதியில் நூலகம் மற்றும் இரவு பாடசாலைகள் அமைக்கப்பட்டது. இதனை மே 31ந்தேதி மாலை திறந்து வைக்க ஆம்பூர் வந்த இயக்குநர் பா.ரஞ்சித், அந்த கட்டிடத்தை திறந்துவைத்தார்.

r

Advertisment

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், காலா -2 திரைப்படம் வர வாய்ப்பு இல்லை. ஆனால், காலா போன்ற திரைப்படங்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது.

Advertisment

ராட்சஸி திரைப்படத்தில் ஜோதிகா நடித்து உள்ளார். அப்படத்தின் டிரெய்லர் பார்த்தேன். அந்த டிரைய்லரில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படத்தை மையப்படுத்தி உள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது.மேலும் அந்த டிரெய்லரில் பள்ளிக் கல்வி அவல நிலைகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது’என்றார்.

r