Published on 10/08/2024 | Edited on 10/08/2024
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சார்பதிவாளராக உள்ளவர் கவிதா. இவர் ஒரு புரோக்கரிடம் பத்திரப் பதிவு செய்ய லஞ்சமாக வாங்குவது போன்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், சார்பதிவாளர் கவிதா லஞ்சமாக கேட்ட ஒரு குறிப்பிட்ட தொகையில், ஏற்கனவே ஒரு லட்சம் கொடுத்துவிட்டோம். 75 இதில் உள்ளது. அடுத்த முறையில் இருந்து பார்த்துக் கொள்ளலாம் என புரோக்கர் சார்பதிவாளரிடம் சொல்வது பதிவாகியுள்ளது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், சார் பதிவாளர் கவிதா முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சார் பதிவாளர் கவிதாவை பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.