Fellow policemen provide financial assistance policeman's family who lost their son

Advertisment

விருதுநகர் மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கடும் முயற்சியால் காவலர் ஆனவர் அருண். கடந்த ஜூலை 10ம் தேதி,சென்னை ஆயுதப்படையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆயுதப்படைக் காவலர் அருண், குடும்பப் பிரச்சனை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். காவலராக அருண் பணியாற்றியது, அவரது குடும்பத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிகரமாக இருந்து வந்தது.

கண்,காது இயங்காத அவருடைய தாய், தந்தையின் வாழ்க்கை நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்தது. இந்நிலையில்,அருணின்மரணம்,அக்குடும்பத்திற்குப் பேரிடியாக அமைந்தது. கடன் சுமையால் அந்தக் குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டனர்.இதனை அறிந்தஅவருடன் தேர்வான காவலர்களான 2022 பேஜ் காவலர்கள்,‘அருணின் குடும்பம் நமது குடும்பம். நாம் அருணின்‌ குடும்பத்தைத் துன்பத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.’என உறுதி பூண்டனர். வாட்சப் குழு மூலமாகத்தமிழ்நாட்டில் உள்ள அவரது பேஜ் காவலர்கள் அனைவரையும்ஒருங்கிணைத்தனர். ஒவ்வொரு காவலரும் தங்களால் முடிந்த பணத்தை அனுப்ப ஆரம்பித்தனர்.

Fellow policemen provide financial assistance policeman's family who lost their son

Advertisment

இதுவே பன்மடங்கு பெருகி,ரூ. 7,13,452 ஆகச் சேர்ந்தது. இந்தத்தொகைஅருணின் குடும்பத்திற்கு,அருண் பேஜ் காவலர்கள் மூலமாகக்கொடுக்கப்பட்டுள்ளது.2022 பேஜ் காவலர்கள்‌ பயிற்சி முடித்து 7 மாதங்கள் தான் ஆகிறது. தமிழககாவல்துறை வரலாற்றில், இதுவரையிலும்இவ்வளவு குறைந்த பணிக் காலத்தில்இவ்வளவு பெரிய தொகையை, உடன் பணியாற்றும் காவலர் குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்டதில்லை என்கிறார்கள். இதற்கு முன்பும்,விபத்துக்குள்ளான மூன்று 2022 பேஜ் காவலர்களுக்கு இவர்கள் உதவியிருப்பது குறிப்பிடத்தக்கது.இத்தகவலை அறிந்த சீனியர் காவலர்கள் 2022 பேஜ் காவலர்களைப் பாராட்டிவருகின்றனர்.