மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பாராளுமன்றத்தில் மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்தார் இந்த பட்ஜெட் பற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளரும் கள் இயக்க தலைவருமான செ.நல்லசாமி,
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான கடன் ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு கடன் கொடுத்து எங்களை எப்போதுமே கடனாளியாகவே வைத்துக்கொண்டுள்ளனர். எங்களின் நீண்டகால கோரிக்கையான அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவது போல் விவசாயிகளுக்கும் தனிக்குழு அமைத்து அதன் பரிந்துரை அடிப்படையில் நாங்கள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது தான்.
ஆனால் நிதிநிலை அறிக்கையில் இதுபற்றி எவ்வித அறிவிப்பும் இல்லை. எத்தனால் எரிபொருளாக பயன்படுத்தினால் கிராமப் பொருளாதாரம் மேம்படும். இதுதொடர்பாகவும் அறிவிப்பு எதுவும் இல்லை. விவசாயிகளின் விளைபொருட்களை கொண்டு செல்ல குளிர்சாதன வசதி கொண்ட கிஷான் ரயில் அறிவிப்பை தவிர விவசாயிகளுக்கு என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு உருப்படியாக பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை என்றார்.