Skip to main content

விடைபெற்ற ஆணையர்; கண் கலங்கிய மேயர்

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

 Farewell Commissioner A confused mayor

 

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த சரவணக்குமார் கரூர் மாநகராட்சிக்குப் பணிமாறுதல் பெற்றுச் செல்கிறார். இதனையொட்டி ஆணையருக்கு மாநகராட்சி மன்றத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் கண் கலங்கி அழுதபடியே சரவணக்குமாருக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பியுள்ளார்.

 

இந்த விழாவின் போது ராமநாதன் மேயர் பேசுகையில், “நட்பு, அன்பு, பாசம், நேசம் இது எல்லாம் நண்பர்களிடம் தான் பழக முடியும். தற்போது கூட வணிக வளாகங்களை ஏலம் விட்டதின் மூலம் 27 கோடியே 92 லட்சம் ரூபாயை மாநகராட்சிக்கு வைப்புத்தொகையாக வைத்துவிட்டுத்தான் செல்கிறார். மேயராக இல்லாமல் நண்பனாக கேட்கிறேன், நீங்கள் மாவட்ட ஆட்சியர் ஆகும் சூழல் வரும்போது தஞ்சை தான் வேண்டும் என்று கேட்க வேண்டும். நீங்கள் தஞ்சைக்கு மாவட்ட ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என கண் கலங்கியபடியே பேசினார்.

 

ஆணையர் சரவணக்குமார் பேசும்போது, “இந்த பணியில் இருக்கும் போது மேயரோடு ஒரு சகோதரர் என்ற முறையில் நான் பழகி உள்ளேன். அனைத்து மாமன்ற உறுப்பினர்களுடன் நான் அப்படித்தான் பழகி உள்ளேன்” எனக் கலங்கிக் கொண்டே பேசினார். இது தொடர்பான வீடியோ மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்