A famous rowdy encounter in Sriperumbudur

Advertisment

ஸ்ரீபெரும்புதூரில் போலீசார் பிடியிலிருந்து தப்பிக்க முயன்ற பிரபல ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிளாய் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி விஷ்வா (38). சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர். இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளைமுயற்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், ஒருவழக்குதொடர்பாக விஷ்வாவை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் கடந்த சில நாட்களாகவே முயன்று வந்தனர். இந்தநிலையில் சுங்குவார் சத்திரம் அருகே ரவுடி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், போலீசார் சோகண்டி என்ற பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது பிடிபட்ட ரவுடி விஷ்வா தப்பிக்க, போலீசாரை தாக்கிய நிலையில்தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் விஷ்வா உயிரிழந்தார்.