Skip to main content

நான் ஒரு கோடி தருகிறேன்... ரஜினி தருவாரா? பிரபல சினிமா தயாரிப்பாளர் சர்ச்சை ட்வீட்... கோபமான ரஜினி ரசிகர்கள்!

Published on 24/03/2020 | Edited on 25/03/2020

கரோனா வைரஸ் தடுப்புக்கான முயற்சிகளின் முக்கியப் பகுதியாக மார்ச் 22ஆம் தேதியன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று மக்களைப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பிரதமரின் வேண்டுகோளை மக்கள் கடைப்பிடிப்பது அவசியம் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (மார்ச் 21) வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கரோனா விழிப்புணர்வு குறித்தும், சுய ஊரடங்கிற்கு ஆதரவு கொடுப்பது குறித்தும் ஒரு வீடியோவைப் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. பின்பு நடிகர் ரஜினி பதிவிட்ட வீடியோவை ட்விட்டரின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதாகக் கூறி ட்விட்டர் நிர்வாகம் வீடியோவை நீக்கியது. மேலும் 

 

 

producer



இந்த நிலையில், கரோனா பாதிப்பை எதிர்கொள்ள நான் ஒரு கோடி ரூபாய் உதவி செய்கிறேன், ரஜினி செய்வாரா என்று தொழிலதிபர் வருண் மணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "இந்த பெருந் தொற்று சமயத்தில் மக்களுக்கு உதவும் வகையில் கொரோனா வைரஸ் கிருமி பாதிக்கப்பட்டவரை விரைவாகக் கண்டறியும் கருவியை ரூ.1 கோடிக்குச் சீனாவில் இருந்து வாங்கி வருகிறேன். மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக இருந்தால் ரஜினிகாந்த் ரூ.1 கோடி தரத் தயாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ரஜினி ரசிகர்கள் தொழிலதிபர் வருண் மணியனுக்கு எதிராகக் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் கரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்தால் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ கோரியிருந்தார் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி. அதனையடுத்து சினிமா தொழிலாளர்களுக்கு உதவ ஃபெப்சி அமைப்புக்கு ரூபாய் 50 லட்சம் நிதியுதவி அளித்தார் நடிகர் ரஜினிகாந்த் என்பது குறிப்படத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்