![Famous actor sues producer Gnanavelaraja!](http://image.nakkheeran.in/cdn/farfuture/23ibQEkgdc65liUwyyVwgnjXdMGMLqi0J2uhTdsQA1A/1648520684/sites/default/files/inline-images/zxcasasas.jpg)
திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். 4 கோடி ரூபாய் சம்பளப் பாக்கி தர உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளார். மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட பதினைந்து கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த மனுவில் சம்பளப் பாக்கியை செலுத்தும்வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யத் தடை தேவை எனவும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை தேவை என சிவகார்த்திகேயன் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.