Skip to main content

வெளியான போலி தகவல்; வீடியோ வெளியிட்ட 'கிழக்கே போகும் ரயில்' ஹீரோ

Published on 28/05/2023 | Edited on 28/05/2023

 

 False information published; 'Eastbound Train' Hero released the video

 

இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் 'கிழக்கே போகும் ரயில்' எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சுதாகர். தொடர்ந்து சுவரில்லாத சித்திரங்கள், அதிசய பிறவி, நிறம் மாறாத பூக்கள் ஆகிய பல சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார்.

 

தற்பொழுது 64 வயதான சுதாகர் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் வெளியானது. இதனைக் கண்டு அதிர்ந்த நடிகர் சுதாகர் தான் நலமுடன் இருப்பதாகவும், வெளியான தகவல் போலியானது என்றும், தான் வழக்கம்போல் சந்தோஷமாக இருப்பதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை தற்கொலை; புஷ்பா பட நடிகர் கைது

 

Pushpa Actor jagadeesh Arrested regards actress passed away

 

தெலுங்கில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த துணை நடிகை ஒருவர் கடந்த 29 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் யாரோ ஒருவருடைய தூண்டுதலின் பெயரால் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் நடிகர் ஜெகதீஸ்தான் அந்த துணை நடிகையை மிரட்டி வந்ததாக அறியப்பட்ட நிலையில், அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் கேசவா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர். 

 

இவரும் அந்த துணை நடிகையும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். பின்பு இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து அந்த துணை நடிகை வேறோரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு உறவில் இருந்துள்ளார். அப்போது அவருடன் நெருக்கமாக இருக்கும் பொழுது ஜெகதீஸ் அதை புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை இணையத்தில் கசிய விடுவேன் என துணை நடிகையை மிரட்டி வந்துள்ளார். இதன் அழுத்தம் காரணமாகவே துணை நடிகை தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

 

Next Story

விஜய் பட வில்லன் நடத்திய துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு

 

TV actor Bhupinder Singh arrested

 

இந்தியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் பூபிந்தர் சிங். மேலும் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் விஜய் நடித்த பத்ரி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

உத்தர பிரதேசம் பிஜ்னோர் பகுதியில் வாழ்ந்து வரும் இவருக்கும் அருகில் இருக்கும் குர்தீப் சிங் என்பவருக்கும் மரம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. குர்தீப் சிங்கின் தோட்டம் பூபிந்தர் சிங் இல்லத்திற்கு அருகில் இருப்பதால், தோட்டத்தில் இருக்கும் யூகலிப்டஸ் மரம் வெட்டுவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் பிரச்சனை வந்துள்ளது. அப்போது, பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்களும் உரிமம் பெற்ற ரிவால்வர் மற்றும் சட்டவிரோத துப்பாக்கியுடன் குர்தீப் சிங்கின் குடும்பத்தினரை சுட்டுள்ளனர். 

 

அதில் குர்தீப் சிங் மகன் கோவிந்த் (23) இறந்துள்ளார். மேலும் குர்தீப் சிங், அவரது மனைவி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து துப்பாக்கி சூடு சம்பவத்தை அறிந்த டிஐஜி, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தகவல்களை பெற்று பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தார்.  இதன் பேரில் பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். மீதமுள்ள இருவரை தேடி வருகின்றனர்.