falling into a ditch dug for a traveler - tragedy in Virudhunagar

விருத்தாசலம் அருகே மழைநீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ளது விஜயமாநகரம் கிராமம். அந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பயணிகள் நிழற்குடை அமைப்பதற்காக 10 அடி அகலமும், ஆறு அடி உயரமும் கொண்ட குழிகள் தோண்டப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக அந்த பள்ளங்கள் மழைநீரால் மூடப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரின் மகன் வினோத் என்ற 11 வயது சிறுவன் அந்தப் பகுதியில் வந்த பொழுது தவறி தண்ணீருக்குள் விழுந்துள்ளார். சுற்றி இருந்தவர்கள் சிறுவனைக் காப்பாற்ற முயன்ற நிலையில், சேற்றில் சிக்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட சிறுவனின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் அலட்சியமாக இருந்ததைக் கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.