Skip to main content

வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல் குறித்த போலி வீடியோ; சம்பவத்தில் திடீர் திருப்பம்

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

Fake video on North State workers attack; Sudden turn of events

 

தமிழகத்தில் திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்கள் வெளியாகிய விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது தொடர்பான போலியான தகவல்களை பரப்பியது பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இது தொடர்பாக தனிப்படையும் அமைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் திடுக் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலியாக பரப்பப்பட்ட அந்த வீடியோ பீகார் மாநிலம் பாட்னாவில் எடுக்கப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. எவ்வித காயமும் ஏற்படாத சிலர் காயமடைந்ததைப் போல் சித்தரிக்கப்பட்டு வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

Fake video on North State workers attack; Sudden turn of events

 

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவதில் முக்கிய நபராக இருந்த மணீஷ் காஷ்யப் என்ற யூடியூபரை தமிழக தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து சென்ற தனிப்படை போலீசார் பீகார் போலீசாருடன் இணைந்து மணீஷ் காஷ்யப்பை விரட்டி பிடிக்கச் சென்றபோது தப்பித்து ஓடிய மணீஷ் பின்னர் பீகார் மாநிலம் ஜெகதீஸ்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தமிழ்நாடு போலீசார் பீகார் போலீசாருடன் இணைந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மணீஷ்  காஷ்யப்பை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தவும் தமிழக தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மணீஷ் மீது தமிழ்நாட்டில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவரின் தந்தை படுகொலை; அதிரவைக்கும் சம்பவம்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
India Alliance Party leader's father incident in bihar

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. அதன்படி, பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்தத் தேர்தலில், பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கினர். எதிர்க்கட்சியினரின் விடாமுயற்சியால் மக்களவைத் தேர்தலில் 234 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறது.

இந்த இந்தியா கூட்டணியில் பீகாரில் உள்ள விகாஸ்ஷீல் இன்சான் என்ற கட்சியும் அங்கம் வகித்து வருகிறது. இக்கட்சியின் தலைவராக, பீகார் மாநில முன்னாள் முதல்வர் முகேஷ் சஹானி இருந்து வருகிறார். முகேஷ் சஹானியின் தந்தை ஜித்தன் சஹானி, பீகார் மாநிலம் பிரால் பகுதியில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (16-07-24) காலை, ஜித்தன் சஹானி அவரது அறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரது வயிறு, மார்பு ஆகிய இடங்களில் கத்திக்குத்தி காயங்களும், வெட்டுக் காயங்களும் இருந்தன. 

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் உயர் அதிகாரிகள், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவரின் தந்தை படுகொலை செய்யப்பட்டிருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நிதிஷ்குமார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அம்மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

Next Story

ஆளும் கட்சியை வீழ்த்தி சுயேட்சை வேட்பாளர் நிகழ்த்திய சாதனை; படுதோல்வியில் நிதிஷ்குமார்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
independent candidate won at byelection in bihar

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியையும் சேர்த்து இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்தது. இதில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

இதில் பீகாரின் ரூபாலி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் கலாதர் பிரசாத் மண்டல், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் பீமா பாரதி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், லோக் ஜன சக்தி சார்பில் ஏற்கெனவே எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வந்த சங்கர் சிங், தற்போது அந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். 

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங் 68,070 வாக்குகள் பெற்று பெற்றியிருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் கலாதர் பிரசாத் மண்டல் 59,824 வாக்குகள் பெற்று 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதனால், பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது.