Skip to main content

நிஜத்தை மிஞ்சும் போலி பேஸ்புக் ஐடி... பிரபலத்தின் பெயரை சொல்லி பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது!

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

இந்தி திரைப்படத் துறையில் பிரபல பின்னணிப் பாடகராக இருப்பவர் அர்மான் மாலிக். அவரது பெயரில்  போலி என்றே யூகிக்க முடியாத அளவுக்கு உண்மைபோல் முகநூல் மற்றும் டுவிட்டர் கணக்குகள் துவங்கி அந்த போலி கணக்குகளை பயன்படுத்தி பெண்களை வலையில் வீழ்த்தி பணம் பறித்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

 

fake

 

இந்தி திரைப்படத் துறையில் பிரபல பின்னணிப் பாடகர் மற்றும் நடிகருமான அர்மான் மாலிக் பெயரில் போலியாக முகநூல் மற்றும் டுவிட்டரில் கணக்கு தொடங்கிய  உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மகேந்திரவர்மன் என்ற 30 வயது இளைஞர் அவரின் உண்மையான இணையதளத்தில் இருந்து அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அவற்றை தான் துவங்கிய போலி கணக்கில் பதிவிட்டு நிஜத்தையே மிஞ்சும் அளவிற்கு பேக் ஐடியை உருவாக்கி தன்னை அர்மான் மாலிக் என்று அனைவரையும் நம்பவைத்துள்ளான். 

 

fake

 

அதனைத் தொடர்ந்து இளம் பெண்களை குறிவைத்து அவர்களுக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பி உள்ளார் பேக் ஐடி மகேந்திரவர்மன். பிரபல பாடகரின் நட்பு அழைப்பு என்று நம்பி பல இளம் பெண்கள் அவரது வலையில் விழவே மெதுவாக அந்த பெண்களிடம் பழகி அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை மகேந்திரவர்மன் வாங்கியுள்ளான். ஆனால் ஒருகட்டத்தை தாண்டிய பிறகு அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு அவ்வப்போது பணம் தர வேண்டும் என்று மகேந்திரவர்மன் மிரட்டவே பல பெண்கள் தங்களால் இயன்ற அளவிற்கு பணத்தை அவனிடம் கொடுத்துள்ளனர். 

 

fake

 

இதன் மூலம் பல லட்சம் ரூபாயை மிரட்டி சம்பாரித்துள்ளான். இந்த நிலையில் மகேந்திரவர்மனின் வலையில் சிக்கிய கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவன் போலி என்பதை அறிந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் துணிச்சலாக புகார் அளித்தார். இதையடுத்து ஆய்வாளர் யமுனாதேவி உதவி ஆய்வாளர் அருண் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அந்த இளம்பெண் மூலம் மகேந்திரவர்மனிடம் நைசாக பேசி கோவைக்கு வரவழைத்துள்ளனர். பணம் தருவதாக கூறியதால் ஆவலுடன் கோவைக்கு காலையில் வந்தவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

fake


பட்டதாரியான மகேந்திரவர்மன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததும், யாருக்கும் சந்தேகம் வராதபடி செல்போன் மற்றும் பேஸ்புக் மூலமாக பெண்கள் தொடர்பு கொண்டு இணையம் மூலமாகவே பணம் பெற்றுள்ளான் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 அவனது செல்போன் மற்றும் டேப்பை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நான்கு உயிர்களைப் பறித்த கள்ளச்சாராயம்; சாராய வியாபாரி கண்ணுக்குட்டி கைது

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
nn

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், அதனைப் பத்துக்கும் மேற்பட்டோர்கள் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் சாராயம் குடித்த ஜெகதீஷ், பிரவீன், சுரேஷ், சேகர் ஆகிய 4 பேர் கள்ளச்சாரம் அருந்தி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் பலியான  சம்பவத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் இதுவரை யாரும் அப்பகுதிக்கு வந்து விசாரணை செய்யவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பகுதியில் கண்ணுகுட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவர் கள்ளச்சாராயம் விற்பதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கள்ளச்சாரயம் குடித்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேசமயம் உயிரிழந்த 4 பேரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கவில்லை என்று கூறிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரேதப்பரிசோதனைக்கு பிறகு அவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகும் எனத் தெரிவித்தார். ஆனால் உயிரிழந்தவர்களின் மனைவி மற்றும் உறவினர்கள் கள்ளச்சாராயம் குடித்துதான் உயிரிழந்தார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

nn

இது தொடர்பாக இறந்தவர்களின் உறவினர்கள் கூறும் போது, இரவு கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிறகுதான் கண் எரிச்சல், வயிற்று வலி, வாந்தி போன்றவைகள் ஏற்பட்டது. அப்போது அவர்களிடம் கேட்டதற்கு கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வந்தேன் என்றார்கள். கள்ளச்சாராயத்தினால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கடைசி குடும்பம் எங்கள் குடும்பமாக இருக்கட்டும். இனிமேலாவது கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் சாராய வியாபாரியான கண்ணுகுட்டி என்ற கோவிந்தராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பு; கண்ணீர் வடிக்கும் உறவுகள்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
4 people passed away after drinking Kallakaryam in Kallakurichi

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், அதனைப் பத்துக்கும் மேற்பட்டோர்கள் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில்தான் தற்போது ஜெகதீஷ், பிரவீன், சுரேஷ், சேகர் ஆகிய 4 பேர் கள்ளச்சாரம் அருந்தி உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தற்போது கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் பலியான  சம்பவத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் இதுவரை யாரும் அப்பகுதிக்கு வந்து விசாரணை செய்யவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பகுதியில் கண்ணுகுட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவர் கள்ளச்சாராயம் விற்பதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளச்சாரயம் குடித்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிக்கிசை பெற்று வருகின்றனர்.

அதேசமயம் உயிரிழந்த 4 பேரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கவில்லை என்று கூறிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரேதப்பரிசோதனைக்கு பிறகு அவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகும் எனத் தெரிவித்தார். ஆனால் உயிரிழந்தவர்களின் மனைவி மற்றும் உறவினர்கள் கள்ளச்சாரயம் குடித்துதான் உயிரிழந்தார்கள் என்று தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக இறந்தவர்களின் உறவினர்கள் கூறும் போது, இரவு கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிறகுதான் கண் எரிச்சல், வயிற்று வலி, வாந்தி போன்றவைகள் ஏற்பட்டது. அப்போது அவர்களிடம் கேட்டதற்கு கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வந்தேன் என்றார்கள். கள்ளச்சாராயத்தினால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கடைசி குடும்பம் எங்கள் குடும்பமாக இருக்கட்டும். இனிமேலாவது கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.