
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகில் உள்ள கீழாத்தூர் கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மணிகண்டன், மணி உள்ளிட்ட 4 பேர் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள ஈச்சன்விடுதி வழியாக செல்லும் கல்லணை கால்வாய் பாலத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.
இளைஞர்கள் வேகமாக செல்லும் ஆற்றுத் தண்ணீரில் குதித்து விளையாட அதில் மணிகண்டன் தண்ணீர் கீழே இறங்கும் சுழலில் சிக்கியுள்ளார். இதைப் பார்த்த நண்பர்கள் மணிகண்டனை மீட்க முடியாமல் தவித்துள்ளனர். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தேடியும் மாலை வரை மீட்க முடியவில்லை. இரவில் தேடும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி அறிந்த மணிகண்டனின் உறவினர்களும் கிராமத்தினரும் ஆற்றுக்கரையில் இரவிலும் காத்திருக்கின்றனர்.