Skip to main content

பொதுத் தேர்வில் தோல்வி! மாயமான மாணவனை மீட்ட காவல்துறை! 

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

Failed  public exam police rescue student

 

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவன் குமார் வயது 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அப்பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்துள்ளார். இதனால், தனது பெற்றோருக்கு அஞ்சி தனது வீட்டில் இருந்து மாயமானார். இதுபற்றி தகவல் அறிந்த மாணவனின் தந்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளார். ஆனால், மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான மாணவனை தேடி வந்தனர். இந்நிலையில், அந்த மாணவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவலர் பிரதீப் தலைமையிலான குழுவினர் மாணவனை மீட்டுவந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்