
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வெடி தயாரிக்கும் பொழுது ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது ஆவிச்சிப்பட்டி கிராமம். அங்குள்ள பூலாமலை அடிவாரத்தில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றில் வெடிகள் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு வெடி தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் அடையாளம் காணப்பட முடியாத நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு வெடி தயாரிக்கும் ஆலையை நடத்தி வந்த செல்வம் என்பவர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். திண்டுக்கல்லில் வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.