Explosion in the fireworks shed ... Relief notice to the families of the victims!

கடலூரில் வானவேடிக்கை பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

கடலூர் மாவட்டம் எம்.புதூரில் உள்ள வானவேடிக்கை பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் ஏற்பட்ட இந்த விபத்தில் ஐந்து பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில் இந்த விபத்தில் மொத்தம் 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொட்டகைக்கு உள்ளே உள்ள பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த தீவிபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த 3பேரின் குடும்பத்திற்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இத விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுகவின் ஓபிஎஸ், பாமகவின் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment