/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_466.jpg)
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் காலியாக இருந்த ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் பொறுப்பிற்குத்தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினரான சிந்தனை செல்வனை நியமித்து அறிவித்தது.
இந்தநிலையில், வியாழக்கிழமையன்று சிந்தனை செல்வன், பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் கோப்பில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கட்சியினர் என அனைத்து தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளைத்தெரிவித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_467.jpg)
இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசிடம் பல்கலைக்கழகத்தின் நிலைமை குறித்து விளக்கிக்கூறி பல்கலைக்கழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். ஊழியர் பிரச்சனைகளைக் கலைய அரசிடம் அவர்களின் குறைகளை எடுத்துச் சென்று தீர்ப்பேன். எனக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)