"காவேரி கூக்குரல்" என்ற நிகழ்ச்சியை முன்னிட்டு மரம் நடுவதற்காகப் பொதுமக்களிடம் இருந்து 10 ஆயிரத்து 626 கோடி ரூபாயை வசூலிக்கப் போவதாக ஜக்கி வாசு தேவ் அறிவித்து இருந்தார். இதைப் பார்த்த பெங்களூரைச் சேர்ந்த அமரநாதன் என்பவர், ஏழை எளிய மக்களே தங்கள் சம்பாத்தியத்தில் மரங்களை நட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் போது, மிகப்பெரிய சொத்துக்களைக் கொண்ட ஈஷா நிறுவனம், மரம் நடுவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலிக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு யார் அனுமதி கொடுத்தது? இந்த வசூலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அங்கிருக்கும் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், ஜக்கியின் மெஹா வசூலுக்கு இடைக்காலத் தடையை விதித்தது மட்டுமில்லாமல், ஈஷா மையத்திடமும் அங்குள்ள அரசிடமும் விளக்கம் கேட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் ஜக்கி தரப்பு அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.