/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/erode-sp-art.jpg)
ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர்கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் ரவுடிசம், கள்ளச்சாராய,மது மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவற்றை ஒழிக்கப் பாடுபடுவேன் என்று கூறினார். இதேபோல் குற்றச் சம்பவங்களைத்தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இரவு நேர ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்படும் எனவும் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இரவு நேர ரோந்துப் பணியில் கவனம் செலுத்தும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 சப்- டிவிஷன்களான ஈரோடு டவுன் பகுதி, பவானி, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய சப்- டிவிஷனில் சத்தியமங்கலம் உட்கோட்டகாவல் துணை கண்காணிப்பாளர் அய்மான் ஜமால் தலைமையில் ஒவ்வொரு சப் - டிவிஷனில் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் இரவு ரோந்துப் பணியில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர்கள் கீழ் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் இரவு நேரம் ரோந்துப் பணியைத்தீவிரமாகக் கண்காணிப்பார்கள்.
மாவட்டம் முழுவதும் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களது செல்போன் எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சத்தியமங்கலம் உட்கோட்டகாவல் துணை கண்காணிப்பாளர் அல்மான் ஜமால் செல் நம்பர் 9498111786, ஈரோடு டவுன் பகுதிக்கு மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா-94436 56999 ரோந்து காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பவானி சப்- டிவிசனுக்கு பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி-94981 02067, கோபி சப்- டிவிசனுக்கு கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி- 83000 37067, சத்தியமங்கலம் சப் - டிவிசனுக்கு பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார்- 9498149743, பெருந்துறை சப் டிவிஷனுக்கு கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த்-9498191545 ஆகியோர் ரோந்து அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது தொலைப்பேசி எண்ணிற்கு பொதுமக்கள் புகார்களைத்தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)