Skip to main content

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு; அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

erode municipal corporation dmk versus admk related controversy 

 

கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும் போலி மதுபானங்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்நிலையில் மாநிலத்தில் பெருகி வரும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயத்தை கண்டித்து இன்று நடைபெற்ற ஈரோடு மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து சூரம்பட்டி ஜெகதீசன் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் 6 பேர் வெளிநடப்பு செய்தனர்.

 

பேரவைக் கூட்டத்தில் இந்தப் பிரச்சனையை எழுப்பியபோது, திமுக ஆட்சி பற்றி அவதூறாகக் குறிப்பிட்டதற்கு திமுக கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது திமுக உறுப்பினர்களின் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுகவினர் தங்களை மிரட்டியதாகவும், திட்டியதாகவும் செய்தியாளர்களிடம் அதிமுக உறுப்பினர்கள் புகார் செய்தனர். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவலா... நீங்க சொல்லித்தான் தெரியும்” - இ.பி.எஸ்.

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Edappadi palanisamay addressed press in salem

 

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அரசு பல்நோக்கு மருத்துவமனை, அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம், ராணுவ அதிகாரிகளின் குடியிருப்புகள், தலைமைச் செயலகம், துறைமுகம் எனச் சென்னையின் முக்கியமான விஷயங்கள் எல்லாம் இருக்கும் இடத்தில் இந்த கார் பந்தயத்தை நடத்த வேண்டியது அவசியமா. கார் பந்தயம் நடத்துவதற்காகவே ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டையில் மைதானம் இருக்கிறது; அங்கு நடத்தலாம். இந்த கார் பந்தயம் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இது வெறும் விளம்பர அரசு. இந்த கார் பந்தயத்தால் ஏழை மக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடையாது” என்று தெரிவித்தார். 

 

தொடர்ந்து செய்தியாளர்கள், பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் வந்ததாகக் கூறி அமலாக்கத்துறை அரசு மருத்துவரை மிரட்டியதாக சொல்லப்படுகிறது என கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்ததா இல்லையா என்பது குறித்து நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். எங்கே தவறு நடந்தாலும், அது தவறுதான். எனவே அதில் சட்டம் அதன் கடமையை செய்வதில் எந்த தவறுமில்லை” என்று தெரிவித்தார். 

 

தொடர்ந்து ‘ஆளுநர் விவகாரத்தில் முதல்வரை அழைத்து பேசவேண்டும் என உச்சநீதிமன்ற தெரிவித்துள்ளதே’ எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், “அதுதான் உச்சநீதிமன்றமே தீர்ப்பு கொடுத்துவிட்டதே. பிறகு நாம் என்ன சொல்றது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

'இதுவா சமூக நீதி?' - ராமதாஸ் கேள்வி

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

 'Is this social justice?'- Ramadoss asked

 

அண்மையில் அரசு மாநகர பேருந்துகளில் இலவசப்பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளிடம் பேருந்து நடத்துநர்கள் பெயர், வயது, செல்போன் எண், சாதி ஆகியவற்றை கேப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியால் முன்மொழியப்பட்ட திட்டம்.

 

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் அவர்களின்  பெயர், வயது, சாதி, கல்வித்தகுதி உள்ளிட்ட 15 வகையான வினாக்கள் கேட்கப்பட்டு, அதன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தன. இது தேவையானதும் கூட. இந்தத் தகவல் சேகரிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்த போக்குவரத்து அமைச்சர் இத்தகைய கணக்கெடுப்பு மிகவும் அவசியம், இது சமூகநீதி நடவடிக்கை என்று கூறியிருந்தார்.

 

 'Is this social justice?'- Ramadoss asked

 

அமைச்சரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நான், ’’நகரப் பேருந்துகளில் மகளிரை இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் திட்டம் சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு பயன்படுகிறது என்பதை கண்டறிந்து அதனடிப்படையில், திட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்துவது தான் இதன் நோக்கம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கமும் இதுவே தான். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளால் யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைக் கண்டறிந்து சமூகநீதியை வலுப்படுத்துவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம். அதை செயல்படுத்த அரசு மறுப்பது ஏன்?  அதில் என்ன சிக்கல் உள்ளது?” என்று வினா எழுப்பியிருந்தேன்.

 

இது நடந்தது நவம்பர் 27-ஆம் நாள். அதன்பின் 4 நாட்கள் கழித்து இது தொடர்பாக அதிரடி நடவடிக்கை ஒன்றை தமிழக அரசு எடுத்திருக்கிறது.

 

அது என்ன நடவடிக்கையாக இருக்கும்? தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு ஆணையிட்டு விட்டதோ என்று தானே நினைக்கிறீர்கள். வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.... அது தான் இல்லை. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்துவதை நிறுத்தி விட்டார்கள் என்பது தான் அந்த நடவடிக்கை. சமூகநீதியை எப்படி பாதுகாக்கிறார்கள்' பாருங்கள்' என பதிவிட்டுள்ளார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்